பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

எஸ். எம். கமால்

நிருபித்தார். முடிவு ஹேஸ்டிங்ஸ் குற்றவாளியல்ல என்பது ஆகும். அந்தக் காலத்தில் ஜனநாயகத்தின் பெட்டகமென வர்ணிக்கப்பட்ட அந்தப் பாராளுமன்றத்தின் ஆதரவும் பாதுகாப்பும் இருக்கும் வரை அதற்குக் கட்டுப்பட்ட பணியாளர்கள் இந்திய நாட்டில் எதையும் சாதிக்கலாம் அல்லவா? மனிதாபிமானத்துக்கு அந்த நாட்டு சட்டங்களில் இடம் இல்லை போலும்!!

இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்து, சேதுபதி மன்னரை திருச்சிக் கோட்டையில் சிறையில் அடைத்ததுடன், கும்பெனியார் நிம்மதி கொள்ளவில்லை. மன்னருக்கு ஆதரவாக எங்காவது மக்கள் கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு கோட்டையையும் கோட்டைக்கு வெளியே அமைந்துள்ள மறவர்களது நாடுகளையும், மிகவும் கவனமாகக் கண்காணித்து வந்தனர். காரணம், முதுகுளத்துார் வட்டத்திலுள்ள ஆப்பனுார், சித்திரங்குடி, பேரையூர் நாடுகளைச் சேர்ந்த மறவர்கள், மிகவும் கொடுரமானவர்கள். மேல் மலைநாட்டுக் கள்ளர்களை விட அவர்கள் பழி பாவத்திற்குப் பயப்படாத பழங்குடியினர். கி.பி. 1772-ல் சேதுபதி மன்னரைத் திருச்சியில் அடைத்து வைத்திருந்த பொழுது நவாப்பின் பணியாளர்களும், பரங்கியரும் அவர்களிடம் பட்டபாடு,[1] அவர்கள் நினைவில் நீங்காத பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

சேதுபதி அரசர் கொடுங்கோல் ஆட்சி புரிந்து மக்களைத் துன்புறுத்தி வந்ததாகவும், அன்றாடத் தேவைப் பொருள்களையும் வாணிபத்தில் ஏகபோக உரிமை கொண்டு, விலைவாசிகளை உயர்த்தி மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாலும், கலெக்டரது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாததாலும், அரச பதவியிலிருந்து அவரை அகற்றி இருப்பதாக சென்னை கவர்னரது விளம்பரம் ஒன்று பொது மக்களுக்குத் தெரிவித்தது.[2] அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முழு நிர்வாகத்தையும், நவாப்பிடமிருந்து கும்பெனியாரே பெற்றிருப்பதாகவும், இராம


  1. Madurai Collectorate Records, Vol. 1157, 6–5–1797, pp. 14-15
  2. Revenue consultation, Vol. 63 B, 12-5-1795