அன்பு வெள்ளம்/அன்பில் நம்பிக்கைக்
அன்பில் நம்பிக்கைக் கொள்வது
யோவான் 4:16, "தேவன் நம்மில் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து அன்புற்றிருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக் கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன், தேவனில் நிலைத்திருக் கிறான்; தேவனும் அவரில் நிலைத்திருக்கிறார்”.
நாம் அன்பில், நம்பிக்கைக் கொள்கிறோம். தேவன் நம்மில் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்புகிறோம். நாம் அன்பு நெறியில் நடந்தால், மிக உயர்ந்த தெய்விகப் பேருலகத்தில் நடக்கலாம் என்பதைனையும் நம்புகிறோம்!
அன்பின் வழி நடப்பவர் யாரும் மற்றவர்க்கு மாறாக நடக்கமாட்டார். ஆகவே நாம், இறைவனின் பிள்ளைகளாகவே நடத்தல் வேண்டும். இயேசுவில் தேவன் இருப்பது போல், நம்மில் தேவன் வந்துறையுமாறு நாம் செய்ய வேண்டும்.யார் ஒருவர் அன்பினைக் கடைப்பிடிக்கிறாரோ, அன்பினில் வாழ்கிறாரோ அவர் கடவுளில் வாழ்கிறார்; கடவுளின் அருள் உலகில் வாழ்கிறார்! தன்னை மறந்து தன்னை வெறுமையாக்கித் தன்னில் இறைவனையே உள்ளிருந்து வாழச் செய்பவர். தன்னில் இறைமையை வெளிப்படுத்திக் காட்டுபவர் ஆவார்.
அன்பினால் நாம் பிறந்தோம்; அந்த அன்பு நம்மில் வந்து நிறைந்துள்ளது. ஆகவே நம்மை எதிர் நோக்கி வரும் எத்துணை பெரிய எதிர்ப்பினையும், எத்துணைப் பெரிய பகையினையும் புறமிடச் செய்யும் ஆற்றல் வாய்ந்த மாபெரும் ஆற்றலாகும் அன்பு.
ஆகவே அன்பெனும் பேருலகில் வாழ்க்கையை நடத்திவரும் எவரும் இடைவிடாது கடவுளுடைய தோழமையைக் கொண்டு விளங்குபவர் ஆகிறார்.
திரளான தீவினைகள் வாராமல் நம்மை அரண் எனக் காக்கிறது அன்பு.
1 பேதுரு 4:8 "எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாக இருங்கள். அன்பு, திரளான தீவினைகளை மூடும்”.
ஆம்! திரளான தீவினைகள் நம்மை வந்து சூழ்ந்திடாமல், நம்மை அரண் எனக் காக்கிறது அன்பு. மேலும் நம்மிடம் எந்த தீமையும் வாராமலும் வருவதையும் தடுத்து நிறுத்துகிறது அன்பு.
நாம் எத்தனையோ பேரைக் குறை கூறியிருக்கிறோம்; வெறுத்திருக்கிறோம். அதன் தொடர்பாக அவர்களுடன் சச்சரவு செய்து சண்டையும் போட்டிருக்கிறோம். அதனை இப்போது கேட்டால் கூட நம் நெஞ்சத்திலிருந்து 'உண்மைதான் அது' என்றே விடை வரும். அப்படிப்பட்ட நம் செயல்களிலிருந்து அன்புடைய வரை அரண் எனக் காத்து வருவது அன்பு. ஒருவர் தாம் செய்த தீச்செயலினால் வந்துற்ற தண்டனையைக் கொள்பவராகிய இயேசு விடம் திருப்பி அனுப்பிவிட்டேன். அவர் அதனைச் சுமந்து கொண்டார்.
என் தீங்கிற்குரிய தண்டனையை என்னிடமே திருப்பி அனுப்பி விட்டு, அவர் சுமந்த குறுக்கையினைச் சுமக்காமல் இருந்திருக்க முடியுமா? ஒருகாலும் முடியாது.இதுதான் மானிடனின் இயல்பு; தன்னலம் மிக்க மானிடனின் பண்பு. அன்பை அறியாதவனின் குணம். கடவுள் அன்பின் பெருமையை - மாட்சியைப் பற்றி எப்படியெல்லாம் பேசப்படுகிறது கேட்டீர்களா?
அன்பைப் பற்றிப் பேசப்படும் பேச்சா இது? இல்லவே இல்லை! அமைதியில் துன்புறுவது அன்பு! மெய்ம்மை வகையில் வாயடங்கி வருந்துவது அன்பு! அன்பு, கேட்ட கேள்விக்கெல்லாம் விடையளிக்காது. மொழியில் விடை பகராதது அன்பு! அன்பின் விளக்கம் சொல்லில் வெளிப்படாது.
எதையும் தாங்கி இடர்உறா வாழ்வின்
விதையாய்ப் புதையலாய் விளங்குவது அன்பே.