மாவீரன் மயிலப்பன்= –H
தேவர் என்ற சகோதரர்கள் 24.07.1799ம் தேதி முதல் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியில் மிகவும் துணிச்சலாகவும் தேசப்பற்றுடனும் சித்திரங்குடி சேர்வைக்காரருக்குத் தக்க துணையாக விளங்கியவர்கள். இவர்களது குடும்பம் ஓரளவு சேதுபதி மன்னருக்கு உறவினருங்கூட இரகுநாத கிழவன் சேதுபதி அவருக்கு இருந்த அரசியல் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு மறவர் சீமையின் பல நாட்டுத் தலைவர்களது மக்களுடன் திருமண உறவுகளைக் கொண்டு நாட்டின் பொது வாழ்க்கையில் அமைதியையும் செளசன்னியம் நீடிப்பதற்கு முயன்றார். இந்த வகையில் மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரது பாட்டி ஒருவரும் (மூன்று தலைமுறைக்கு முனனர்) கிழவர் சேதுபதியின் அரச பிராட்டியாக இருந்தவர்.
இவை ஒருபுறம் இருக்க, அப்பொழுது திருச்சிக் கோட்டையில் கைதியாக இருந்த முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதிக்கு ஒரே ஒரு மகள் மட்டும் வாரிசாக இருந்தார். ஐந்து அல்லது ஆறு வயதுடையவர். இவரைத்தவிர இந்தச் சிறுமியின் அத்தை-சேதுபதி மன்னரது தமக்கை மங்களேஸ்வளி நாச்சியார் என்பவர் மட்டும்தான் சேதுபதி பட்டத்துக்கு உரியவராக இருந்தார். இவரும் தமது கணவருடன் சென்னை சென்று தங்கியிருந்து. ஆர்காட்டு நவாபையும் கும்பெனிக் கவர்னரையும் பலமுறை சந்தித்து இராமநாதபுரம் சேதுபதி ராணியாகத் தம்மை அங்கீகரிக்க செய்யுமாறு பலவழிகளிலும் முயன்று கொண்டிருந்தார். இராமநாதபுரம் அரண்மனையைச் சார்ந்த அரசியல் வாரிசு வேறு யாரும் இல்லாநிலையில், சித்திரங்குடி சேர்வைக்காரரும் சிவகெங்கைப் பிரதானிகளும் மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரை இராமநாதபுரம் மன்னராக்க முடிவு செய்தனர். திருவாடனைக்கு அருகில் உள்ள பாண்டுகுடியில் இராமநாதபுரம் சீமை மன்னரும் அவரது அரசும் செயல்பட்டனர். இப்பொழுது பாண்டுகுடி அரண்மனை சிதைந்து விட்டது.
இராமநாதபுரம் கோட்டைக்கு வடகிழக்கே உள்ள நாடுகளில