பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாத்துரை



திற்குத் தலைமை வகிக்க ஒத்துக்கொண்டவரும், பிரசங்கம் செய்யச் சம்மதித்தவர்களும் போலீஸ் ஆர்ப்பாட்டத்தைக்கண்டு அஞ்சி அந்தப் பக்கமே வரவில்லை.

மனம் அலுத்த சிங்காரவேலர், தனியாகப் பீப்பில்ஸ் பார்க் பக்கம் வந்தார். தன் நண்பர்கள் யாரும் வரவில்லையே என்பதற்காகப் பயந்துவிடவில்லை. கூட்டமோ இவ்வளவு தடபுடலாகக் கூடாது என்று எண்ணி வந்த சிங்காரவேல், அங்குக் கண்டதென்ன? பிரம்மாண்டமான கூட்டத்தையும், அதன் மத்தியில் ஒருவர் சமதர்மப் பாடல் பாடுவதையும், இரண்டு மூன்று இளைஞர்கள் மேடை மீது இருப்பதையும் கண்டார். தான் எதிர்பாராத சம்பவம் நடப்பதைக் கண்டு, ஓர் சிறிய புன்னகையுடன் மேடையருகில் வந்து பார்த்தார். மேடை மீது இருந்தவர்கள் தனக்குப் புதிதாய் இருந்தாலும், அன்று தான் எடுத்துக்கொண்ட வேலைக்கு தனக்கு உதவியாக இருப்பதைக் கண்டு, ஆச்சிரியப்பட்டார். கூட்டமே நடக்காது என்று எண்ணியவர், சென்னைப் பொது மக்கள் இவ்வளவு போலீஸ் மிரட்டலையும் அலட்சியப்படுத்திக் கொடுமையாக கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கத் தொழிலாளர்களிடம் அனுதாபம் காட்டி, அவர்கள் கொள்கையை ஆதரிப்பதற்கு அறிகுறியாக இக்கூட்டம் கூடும்படி செய்த சென்னைப் பொது மக்களைப் பாராட்டினார். இக் கூட்டத்தில் தான், காலஞ் சென்ற சிங்காரவேலரின் கவனம் சுயமரியாதை இயக்கத்தின் பக்கம் திருப்பப்பட்டது, பட்டுக்கோட்டைத் தோழர் அழகர்


11