உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/12

விக்கிமூலம் இலிருந்து


12அப்பா! ஒளி தராத நட்சத்திரங்கள் உண்டாமே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அத்தகைய நட்சத்திரங்கள் இருப்பதாகவே வான சாஸ்திரிகள் கூறுகிறார்கள். அவற்றை அவர்கள் இருண்ட நட்சத்திரங்கள் என்று அழைப்பார்கள்,

சாதாரணமாக நமக்கு மிகவும் குறைந்த அளவு ஒளி தரூம் நட்சத்திரங் கூட 3500 டிக்கிரி உஷ்ணம் உடையது. சில பெரிய நட்சத்திரங்களின் உஷ்ணம் 25 ஆயிரம் டிகிரி வரை இருக்கும், ஆனால் இந்த இருண்ட நட்சத்திரத்தின் சூடு ஆயிரம்

டிகிரிதான். அதனால் தான் அவற்றிடம் ஒளி உண்டாவதில்லை. அப்படியானால் அத்தகைய நட்சத்திரங்கள் இருப்பதாக வான சாஸ்திரிகளுக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாய்.

அம்மா! அவர்கள் அந்த மாதிரியான நட்சத்திரங்களைப் படம் பிடிப்பதற்கு ஏற்ற போட்டோக் கருவிகளை வைத்திருக்கிறார்கள். அதன்மூலம் படம் பிடித்து அறிந்து கொள்கிறார்கள்.

சில ஒளிதரும் நட்சத்திரங்களை தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் பார்க்கும்போது இடையிடையே கண்ணுக்குப் புலப்படாமல் போகின்றன. இருண்ட நட்சத்திரம் ஒன்று அதைச் சுற்றி வருவதால்தான் அவ்வாறு இடையிடையே புலனாகாது போவதாக வான சாஸ்திரிகள் தீர்மானிக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/12&oldid=1538067" இலிருந்து மீள்விக்கப்பட்டது