ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பொ. திருகூடசுந்தரம்
(1891–1969)
பொ. திருகூடசுந்தரம், 1891ஆம் ஆண்டில் பிறந்தவர். முதுகலைப் பட்டப்படிப்பின்போது பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றவ்வர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுடையவர். 1921-ல் வழக்கறிஞர் வேலையை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். சென்னை செனட் சபையில் உறுப்பினராக இருந்தார். திருநெல்வேலி நகர சபையில் உறுப்பினராகவும், தேவகோட்டை நகர சபையில் துணைத் தலைவராகவும் இருந்தவர். இவரும் இவரது மனைவியாரும் நாகர்கோவிலில் தீண்டாமைக்கு எதிராக சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலினர். மேலும் தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தார். காந்தியடிகளின் கட்டுரைகளே முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். தமிழில் சொந்தமாக பதினைந்து நூல்களும் மொழிபெயர்ப்பாகப் பத்து நூல்களும் எழுதியுள்ளார். இவற்றில் சென்னை அரசாங்கத்தால் மூன்று நூல்கள் பரிசு பெற்றவை. அறிவியல் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்குமாறு எழுதக் கூடியவராக இருந்தார். தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் கூட்டாசிரியராக இருந்தவர்.

படைப்புகள்[தொகு]