உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/30

விக்கிமூலம் இலிருந்து


30அப்பா! பாலைவனங்களில் மழை பெய்யாவிட்டாலும் சுனைகளும் மரங்களும் உள்ள இடங்கள் உண்டு என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பாலைவனங்களில் அதிகமாக மழை பெய்வதில்லை என்பது உண்மைதான். உலகத்திலுள்ள பாலைவனங்களுள் மிகப் பெரியது ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள ஸஹாரர பாலைவனம் தான். அங்கே அபூர்வமாகவேதான் மழை பெய்யும். அநேக சமயங்களில் மழையானது கீழே இறங்கும் போதே உஷ்ணமிகுதியால் ஆவியாக ஆகி, தரைக்கு வந்து சேராமல் போகும்.

ஆயினும் அங்கே நீ கூறும் சுனைகளும் மரங்களும் உள்ள ஜீவபூமிகள் பல காணப்படவே செய்கின்றன. அவற்றுள் சில இருபது லட்சம் மக்கள் வாழக்கூடிய அளவு பெரியதாகக்கூட இருக்கும் அப்படியானால் அங்கே நீர் இருப்பதற்குக் காரணம் யாது!

அருகிலுள்ள மலைகளின் மீது பெய்யும் மழையானது அங்கே தரையில் ஊறும் போது அடியில் பாறை இருக்குமானால் கீழே இறங்க முடியாது. அப்பொழுது அந்த நீர் பாறைக்கு மேலாகவுள்ள மண்ணின் வழியாக தரையின் அடியே மலைச்சரிவில் இறங்கும், அப்படித் தரைக்கு அடியே இறங்கும் நீர் பாலைவனத்தின் அடியிலும் வந்து சேர்ந்து சுனைகளாக கொப்புளித்துவிடும். அத்தகைய இடங்களில் கிணறுகளும் வெட்டலாம். இந்த விதமாகத்தான் பாலைவனங்களில் நீரும் மரமும் காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/30&oldid=1538106" இலிருந்து மீள்விக்கப்பட்டது