உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/42

விக்கிமூலம் இலிருந்து


42அப்பா! அடுப்பு எரியும் பொழுது அது சாதாரண அடுப்பாயிருந்தால் தொட முடிகிறது இரும்பு அடுப்பானால் தொட முடியவில்லை, அதற்குக் காரணம் என்ன?

அம்மா? நீ சாதாரண அடுப்பு என்பது மண்ணினால் செய்யப்பட்டதாகவோ செங்கல் சுண்ணாம்பால் கட்டப்பட்டதாகவோ இருக்கும். உஷ்ண விஷயத்தில் அந்தப் பொருள்களுக்கும் இரும்புக்கும் ஒரு வேறுபாடு உண்டு. ஒகு இரும்புக் கம்பியின் ஒரு முனையை நீ பிடித்துக் கொண்டு மறு முனையைத் தீயில் வைத்தால் சிறிது நேரத்தில் உன் கையிலுள்ள முனை சூடாகத் தோன்றும். அதற்குக் காரணம் என்ன? இரும்பு சூட்டை எளிதில் கடத்திக் கொண்டுவரும் சக்தியுடையதாயிருப்பதுதான்.

இப்பொழுது நீ இரும்புக் கம்பிக்குப் பதிலாக ஒரு மரக்கட்டையை அவ்வாறு தீயில் வைத்துப்பார். உன் கைக்குச் சூடு வந்து சேராது. அதற்குக் காரணம் இரும்புக்குள்ள சக்தி மரக்கட்டைக்கு இல்லாதிருப்பது தான்.

இது போல உலகிலுள்ள பொருள்களில் சில இரும்பு போல் சூட்டைக் கடத்திச் செல்லும் சக்தியுடையனவாகவும் சில மரக்கட்டைபோல் சூட்டைக் கடத்திச் செல்லும் சக்தியில்லாதனவாகவும் உள. சாதாரண அடுப்பைத் தொட தொட முடிவதற்கும், இரும்பு அடுப்பைத் தொட முடியாதிருப்பதற்கும் இந்த வேறுபாடுதான் காரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/42&oldid=1538131" இலிருந்து மீள்விக்கப்பட்டது