தந்தையும் மகளும்/59
59அப்பா! சிமிண்டு போட்ட தரை செங்கல் தரையைவிட அதிகமாகக் குளிர்ந்திருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?
ஆம். அம்மா! செங்கல் தளத்தைவிட சுண்ணாம்புத்தளம் குளிர்ந்திருக்கும். சுண்ணாம்புத் தளத்தைவிட சிமிண்டுத் தளம் குளிர்ந்திருக்கும். அதற்குக் காரணம் என்ன?
அம்மா! உஷணத்தைக் கிரகித்துக்கொள்ளும் சக்தி செங்கல்லுக்கு உள்ளதைவிட சுண்ணாம்புக்கு அதிகம். அதனால் செங்கல்லைத் தொட்டால் அது அநேகமாக நம்முடைய கையிலுள்ள உஷ்ணத்தைக் கிரகியாமல் இருந்து விடுகிறது. அதனால் அது குளிர்ந்திருப்பதுபோலத் தோன்றுவதில்லை. ஆனால் சுண்ணாம்புத் தளத்தைத் தொட்டால் அது கையிலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்ளும். ஆதலால்தான் அது குளிர்ந்திருப்பது போன்ற உணர்ச்சி உண்டாகிறது.
சிமிண்டுத் தளமோ சுண்ணாம்பையும்விட அதிகமாக உஷ்ணத்தைத் கிரகிக்கக் கூடியதாகும். அதனால்தான் வெயில் காலத்தில் தொட்டால் கூட அது நிரம்பக் குளிர்ந்து தோன்றுகிறது.