உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/70

விக்கிமூலம் இலிருந்து


70அப்பா! மின்சார விளக்குகளுக்கு வழவழப்பான பல்புகளை உபயோகிக்கசகூடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நமமுடைய கண்ணுக்குக் கேடு செய்யாததும் தமானதுமான வெளிச்சம் நம்முடைய கண்ணைவிட உயரமான இடத்திலிருந்தும் வரவேண்டும், நேராக வராமல் சிதறியும் வரவேண்டும். அதனால்தான் கூரையில் மாட்டியுள்ள மின்சார விளக்குகளுக்கு வழவழப்பான பல்புகளை உபயோகிக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்.

ஒளியானது விளக்கிலிருந்து நேராக வருமானாலும் அல்லது அது முகம் பர்க்கும் கண்ணாடி போன்ற பளபளப்பான

பொருள்கள் மீது பட்டு வருவதானாலும் அதன் கிரணங்கள் அநேகமாக சமதூரக் கிரணங்களாகவே இருக்கும். வழவழப்பான சாதாரண பல்பு வழியாக வரும் கிரணங்கள் சம தூரமான கிரணங்களேயாகும். சமதூரக் கிரணங்கள் கண்ணுக்கு இதமாகவும் இரா, கேடு செய்யும். ஆனால் பகலில் சூரிய ஒளி சாதாரணமான சுவரில் பட்டு வருவதைப் பார். சுவர் கண்ணாடியைப்போல் வழவழப்பாக இல்லை. கரடுமுரடாகஇருக்கிறது. அதாவது அது அநேக வழவப்பான பொருள்களை ஒழுங்கின்றி நெருக்கமாக அடுக்கி

வைத்ததுபோல் உள்ளது. அதனால் அதன்மீது விழும் சூரிய ஒளி அந்தப் பல பொருள்களில் பட்டு நாலா பக்கமும் திரும்பி வருவதால் சிதறியே வருகிறது. அதனால் அதன் கிரணங்கள் சமதூரக் கிரணங்களாக இருப்பதில்லை. ஆதலால்தான் அந்த வெளிச்சம் நம்முடைய கண்ணுக்கு இதமாய் இருக்கிறது.

சாதாரண மின்சார பல்பு வழியாக வரும் வெளிச்சம் நேராக வரும் சமதூரக் கிரணங்கள். அதனால்தான் அந்தப் பல்புகளை உபயோகிக்கக்கூடாது. வழவழப்பாக இல்லாத பல்புகளும் உள. (முதற் படம்) அவற்றின் வழியாக ஒளியானது சிதறியே வரும். சமதூரக் கிரணங்களாக இரா. ஆதலால் பல்புகளை உபயோகித்தால் கண்ணுக்கு நல்லது. இதமாயிருக்கும்.

இந்த மாதிரி விளக்குகளில் ஒளியானது கூரைக்குப் போகாமல் கீழேயே வரும். ஆனால் சில விளக்குகளில் (மூன்றாவது படம்) மேல்பாகம் சாதாரண பல்புபோல் வழவழப்பாகவும் கீழ்பாகம் வழவழப்பில்லாமலும் இருக்கும். அதனால் வெளிச்சத்தில் ஒரு பகுது மேல் பாகத்து வழியாகக் கூரைக்குச் சென்று சிதறிவரும், ஒரு பகுதிகீழ் பாகத்து வழியாகச் சிதறிவரும். இத்தகைய விளக்குகள் ழுன்கூறிய விளக்குகளைவிட நல்லவை.

இன்னும் ஒரு வகை விளக்குகள் உள (இரண்டாவது படம்). அவற்றில் கீழ்பாகம் பீங்கானால் செய்யப்பட்டிருக்கும் அதன் வழியாக ஒளி சிறிதுகூட வரமுடியாது. அது சாதாரண பல்புபோன்ற மேல் பாகத்து வழியாகக் கூரைச்குச் சென்று அங்கிருந்தே சிதறிவரும். இத்தகைய விளக்கே அனைத்திலும் சிறந்ததாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/70&oldid=1538207" இலிருந்து மீள்விக்கப்பட்டது