உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/81

விக்கிமூலம் இலிருந்து


81அப்பா! தண்ணீர்த் துளிகள் எப்பொழுதும் உருண்டையாக இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆம் அம்மா! தண்ணீரை சுத்தமான தட்டில் தெளித்தால் அந்தத் தண்ணீர் சிறு சிறு துளிகளாக உருள்வதைப் பார்க்கலாம். தாமரை இலையில் தண்ணீர் பட்டால் அது இந்த மாதிரி உருண்டு பள பள வென்று அழகாய் இருப்பதைப் பார்த்திருக்கிறாய். இம்மாதிரி தண்ணீர் உருள்வதற்குக் காரணம் என்ன?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விளிம்பு வரை ஊற்றினால் அது வழிந்துவிடாமல் இருக்கிறதல்லவா? தண்ணீரின் மேற்பரப்பிலுள்ள அணுக்கள் ஒன்றையொன்று சேர்த்து இழுத்துப் பிடித்துக் கொள்கின்றன. அதனால் அவை ஒரு மெல்லிய தோல்போல் அமைந்துவிடுகிறது. இந்தத் தோல்தான் அதன் அடியிலுள்ள நீரை வழிந்துவிடாமல் தடுக்கின்றது. இந்த மாதிரி இழுத்துப் பிடித்து நிற்கும் சக்தி தண்ணீருக்கு இருப்பது போலவே தர திரவங்களுக்கும் உண்டு. இந்தச் சக்தியால் உண்டாகும் நீர்த்தோல்தான் தண்ணீர்த் துளிகளை உருண்டை வடிவமாகச் செய்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/81&oldid=1538231" இலிருந்து மீள்விக்கப்பட்டது