உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/92

விக்கிமூலம் இலிருந்து


92அப்பா! வண்ணார துணிமூட்டை கொண்டு போகும் போது முன்பக்கமாகக் குனிந்துகொண்டு போகிறாரே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பூமியிடம் ஆகர்ஷண சக்தி என்று ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்பதையும் அது எந்த வஸ்துவையும் தன்னிடமே இழுத்துக் கொள்கிறது என்பதையும் நீ அறிவாய். ஆனல் அந்தச் சக்தி எந்த இடத்தில் இழுக்கிறது தெரியுமோ?

ஒரு வஸ்துவை ஒரு மூலையில் ஒரு கயிற்றால் கட்டித் தொங்கவிட்டு, அது ஆடாமல் நிற்கும் பொழுது, கட்டிய இடத்திலிருந்து செங்குத்தாகக் கோடு இழு. அதுபோல் வேறு ஒரு மூலையிலும் கட்டித் தொங்க விட்டு கோடு இழு. இரண்டு கோடுகளும் ஒன்றையொன்று வெட்டும் இடத்தை ஆகர்ஷண கேந்திரம் என்று கூறுவார்கள்.அந்த இடத்தில்தான் பூமி அந்த வஸ்து முழுவதையும் இழுக்கிறது.

அதனால் அந்த வஸ்துவைக் கீழே நிறுத்தி, அந்தக் கேந்திரத்திலிருந்து செங்குத்தாகத் தரைக்கு ஒரு கோடு இழுத்தால் அது அந்த வஸ்துவின் பாதத்துக்குள்ளேயே வந்து சேருமானால்,அப்பொழுது வஸ்து கீழே விழுந்து விடாமல் நிறுத்தியபடியே நிற்கும். கோடு பாதத்துக்கு வெளியே விழுமானால் வஸ்து சாய்ந்துவிடும்.

வண்ணார் மூட்டையை முதுகில் ஏற்றியதும் மூட்டை அவரைப் பின்னால் இழுப்பதால் ஆகர்ஷண கேந்திரத்திலிருந்து இழுக்கும் கோடு அவருடைய பாதத்துக்குள் விழாமல் வெளியே விழும், அவர் பின்புறமாகச் சாய்ந்து விடுவார். அப்படிச் சாயாமல் இருப்பதற்காகத்தான் அவர் முன்புறமாகச் சாய்ந்துகொண்டு நடக்கிறார். முன் புறமாகச் சாய்ந்தால் அப்பொழுது ஆகர்ஷண கேந்திரம் அவருடைய பாதத்துக்கு நேராக வந்து விடுகிறது. அதனால் அதிலிருந்து இழுக்கும் செங்குத்துக் கோடு பாதத்துக்குள்ளாகவே விழும். அதனால் தான் அவர் சாய்ந்து விடாமல் நடக்க முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/92&oldid=1538254" இலிருந்து மீள்விக்கப்பட்டது