உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/98

விக்கிமூலம் இலிருந்து


98அப்பா! கப்பல் சேதமடையும்போது தோணியில் ஏறித் தப்பித்துக் கொள்வார்களாமே, அது எப்படி முடியும்?

அம்மா! நீ கேட்பது சரிதான். புயல் காற்று வீசுவதால் பெரிய கப்பல் சேதமடையும் பொழுது சிறிய தாணியில் ஏறித் தப்ப முடியுமா? புயல் காற்று வீசும் போது அலைகள் மலைபோல் கிளம்புமே, அப்போது தோணியில் தண்ணீர் நிறைந்த தோணியை மூழ்கும்படி செய்துவிடாதா என்று கேட்பாய்.

ஆம் அம்மா! தண்ணீர் நிறைந்தால் தோணி மூழ்கி விடவே செய்யும். ஆனால் தோணியின் அடிப்பாகத்தில் ஒரு சிறு கதவு இருக்கும். அலை நீர் தோணியில் ஓரளவு ஆனதும் அந்தக் கதவு திறக்கும். நீர் வெளியே போய் விடும். ஆனால் அடியிலுள்ள கடல் நீர் அதன் வழியாகத் தோணிக்குள் ஏற முடியாது. ஏற முயலும் போது கதவு இறுக்கமாக மூடிக் கொள்ளும். இந்தக் காரணத்தால்தான் தோணி சிறியதாயிருந்தாலும் ஜனங்கள் அதன் உதவியைக் கொண்டு உயிர் தப்ப முடிகிறது. அதனால் அந்தத் தோணியை '"உயிர் தப்பிக்கும்தோணி" என்று கூறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/98&oldid=1538263" இலிருந்து மீள்விக்கப்பட்டது