தந்தையும் மகளும்/102
Appearance
102அப்பா! இரும்பைக் கூட எரியும்படி செய்ய முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! ஒரு வஸ்து எரிய வேண்டுமானால், அது பிராணவாயுவுடன் சேர வேண்டும். அப்படிப் பிராணவாயுவுடன் சேர்வதையே “எரிதல்” என்று கூறுகிறோம். கடுதாசி, திரி போன்ற வஸ்துக்களில் தீக்குச்சி கிழித்து வைத்தால் எரிய ஆரம்பித்துவிடும். ஆனால் இரும்பைத் தீயில் வைத்துக் காய்ச்சினாலும் எரிவதில்லை.
ஆனால் இரும்பு எரியவே செய்யாது என்று எண்ணாதே. தீக்குச்சி கிழித்து வைக்காமல் கூட அது எரியவே செய்கிறது. இரும்பின் மீது ஈரமான காற்றுப் பட்டால் அப்போது இரும்பு பிராணவாயுவுடன் சேர்கிறது. அதைத்தான் துரு என்று கூறுகிறோம். ஆனால் உஷ்ணமோ ஒளியோ உண்டாவதில்லை.ஆயினும் விஞ்ஞானிகள் காற்றைக் குளிர்ப்பித்துத் திரவமாக ஆக்கிவிடுகிறார்கள். அந்தக் காற்று திரவமுள்ள பாத்திரத்தினுள் மெல்லிய எஃகுக் கம்பியைப்போட்டு தீக்குச்சியைக் கிழித்து வைத்தால் அது உடனே கண்ணைப் பறிக்கும் பொறிகளைச் சொரிந்து கொண்டு அழகாக எரியும்.