உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/113

விக்கிமூலம் இலிருந்து


113அப்பா! சில படங்களுடைய சட்டங்கள் தங்கம்போல் மின்னுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அந்தச் சட்டங்களில் தங்கத்தைப் பூசி வைத்திருப்பதால்தான் அவ்விதம் அழகாக மின்னுகின்றன. ஆனால் தங்கத்தை உருக்கி அதில் பூசுவது எப்படி என்று கேட்பாய் அம்மா அதில் தங்கத்தை உருக்குப் பூசுவதில்லை. தங்கரேக்கு என்று ஒரு பொருள் இருக்கிறது. அது தங்கத்துடன் செம்போ, வெள்ளியோ சேர்த்துச் செய்தது. அப்படிச் சேர்த்த கலப்புத் தங்கத்தை அதிகக் கனமான சம்மட்டியால் பல முறை அடித்து மெல்லியதாகச் செய்வார்கள். அந்த மெல்லிய தங்கம்தான் ரேக்கு என்பது.

படத்தின் சட்டத்தின் மீது பசை தடவி அது அரை குறையாக உலரும் போது தங்க ரேக்கை அதில் தேய்ப்பார்கள். அது சட்டத்தில் ஒட்டிக் கொண்டு அழகாக மின்னும். சில புஸ்தகங்களின் பக்கங்களின் ஓரங்களும் தங்கம் போல் பளபள வென்றிருப்பதைப் பார்த்திருப்பாய். அதுவும் இவ்விதம் செய்யப் பெற்றதே. ஆனால் அதில் தேய்ப்பதற்கு தங்க ரேக்குக்குப் பதிலாக தங்கத் தூளை உபயோகிப்பார்கள். சில புஸ்தகங்களின் அட்டையில் தங்க எழுத்துக்கள் காணப்படும். அதுவும் தங்கத் தூள் தேய்க்கப் பட்டதே இவ்வாறு தங்கரேக்கைப் பல விதத்திலும் பயன்படுத்துவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/113&oldid=1538295" இலிருந்து மீள்விக்கப்பட்டது