தந்தையும் மகளும்/126
126அப்பா! தண்ணீர் இல்லாமல் ஐஸ் செய்யமுடியுமா?
அம்மா! நாம் கடையில் வாங்கிப் பானங்களில் போட்டுச் சாப்படுகிறோமே, அந்த ஐஸ் முழுவதும் நீர் தான். நீரைத்தான் குளிர்வித்து ஐஸ் கட்டியாகச் செய்திருக்கிறார்கள்.
ஆனால் நீர் இல்லாமல் செய்துள்ள ஐஸ்கட்டியும் உண்டு. நாம் பிராணவாயுவை உள்ளே சுவாசித்து கரியமில வாயுவை வெளியே விடுகிறோம் அல்லவா? அத்தகைய கரியமிலவாயுவைக் குளிர்வித்தால் முதலில் திரவமாகவும் பிறகு கட்டியாகவும் ஆகிவிடும். அது சாதாரண ஐஸைவிட அதிகக் குளிராயிருக்கும். அதனால் அதை உண்டால் மரணம் உண்டாய் விடும்.
சாதாரண ஐஸ் இளகி நீர் ஆவதை நீ அறிவாய்.ஆனால் இந்த ஐஸ சூடு உண்டானால் இளகி திரவமாக மாறாமல் வாயுவாகவே மாறிவிடும். அதனால் தான் அதை விஞ்ஞானிகள் உலர்ந்த ஐஸ்’ என்று கூறுகிறார்கள்.
அதே காரணத்தால் மேனாடுகளில் அழுகிப் போகும் பொருள்களை அதில் பொதிந்து அனுப்புகிறார்கள். இந்த ஐஸ் உண்டாக்குவதற்குச் சாதாரண ஐஸ் உண்டாக்குவதற்கான செலவுதான் ஆகுமாம்.