தந்தையும் மகளும்/132
Appearance
132அப்பா! வெள்ளிக்கரண்டியில் முட்டை பட்டால் கறுத்துப்போகும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! அதற்குக் காரணம் முட்டையில் கந்தகம் இருப்பது தான். அந்தக் கந்தகம் வெள்ளியுடன் சேர்ந்து கறுப்பு நிறமான வேறு ஒரு பொருளாக வெள்ளிக் கரண்டி மீது படிந்துவிடுகிறது. அம்மா! நம்முடைய உடம்பில் உண்டாகும் வேர்வையிலும் கந்தகம் உண்டு. அதனால்தான் வெள்ளிக் காப்பு கருத்துவிடுகிறது.
இப்படி முட்டையில் கந்தகம் இருப்பதால்தான் நாளான முட்டை நாற்றம் எடுக்கிறது. முட்டையிலுள்ள கந்தகம் ஹைட்ரோஜன் என்னும் வாயுடன் சேர்ந்து உண்டாகும் வாயுதான் அந்த நாற்றத்துக்குக் காரணம்.
சிலர்க்கு முட்டைக் கோஸ், வெங்காய மணம் பிடிப்பதில்லை. அவற்றின் மணமும் அவற்றிலுள்ள சொற்ப கந்தகத்தினுடையதேயாகும்.