உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/143⁠

விக்கிமூலம் இலிருந்து


143அப்பா! சுண்ணாம்புக் கல்லின்மீது தண்ணீரை ஊற்றினால், தண்ணீர் கொதிக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! தண்ணீர் கொதிப்பது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் தண்ணீரை அடுப்பில் வைத்துக் காய்ச்சினால் அது கொதிக்கிறதே அதுபோல் கொதிப்பதில்லை. சுண்ணாம்புக் கல்லின்மீது தண்ணீரை ஊற்றினால் தண்ணீர் கொதிக்கவில்லை. உஷ்ணம் உண்டாகிறது என்றுமட்டுமே கூறவேண்டும்.

இரண்டு பொருள்கள் ஒன்றாகச் சேர்ந்து புதிய பொருள் ஒன்று உண்டாகுமானால் அப்பொழுது நடைபெறுவதை "ரஸாயனச் செயல்" என்று கூறுவார்கள். அவ்வாறு ரஸாயனச் செயல் உண்டாகும்போதெல்லாம் உஷ்ணம் உண்டாகும்.

சர்க்கரைமீது தண்ணீரை ஊற்றினால் அவை இரண்டும் ஒன்றாகச் சேர்வதுபோல் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அவை ஒன்றாகச் சேர்ந்து புதுப் பொருளாக ஆவதில்லை. அதனால்தான் சர்க்கரை ஜலத்தில் கரையும்போது உஷ்ணம் உண்டாவதில்லை.

ஆனால் சுண்ணாம்புக் கல்லின்மீது தண்ணீரை ஊற்றினால் அப்போது அவை இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து புதுப்பொருளாக ஆகிவிடுகிறது. அதனால்தான் அப்பொழுது உஷ்ணம் உண்டாகிறது. அதிகமான உஷ்ணம் உண்டாவதால்தான் ஜலம் கொதிப்பதுபோல் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/143⁠&oldid=1538371" இலிருந்து மீள்விக்கப்பட்டது