உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/146

விக்கிமூலம் இலிருந்து


146அப்பா! ரொட்டி செய்ய கோதுமை மட்டும் உபயோகிக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா ! ரொட்டிக் கடையிலிருந்து வாங்கி வரும் ரொட்டி மிருதுவாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன? அதைப் பிட்டுப்பார், அதனுள்ளே பஞ்சுபோல் சிறு சிறு துவாரங்கள் இருக்கின்றன. ஆனால் ரொட்டி செய்பவர் அந்தத் துவாரங்களை எப்படி உண்டாக்குகிறார்?

அவர் மாவை நீரில் கலந்து பிசைந்து அத்துடன் ஈஸ்ட் பொடியும் கலந்து ஊறவைப்பார். அப்போது ஈஸ்ட்டானது மாவை உபயோகித்து கரியமில வாயுவை உண்டாக்குகிறது. அந்த வாயு வெளியே போக முயலும் போது அந்தத் துவாரங்களை உண்டாக்குகின்றன.

ஆனால் இந்தத் துவாரங்கள் நிலைத்து நின்று ரொட்டியை மிருதுவாயிருக்கும்படி செய்ய வேண்டுமானால் ரொட்டி செய்யும் மாவு பிசின் போல் ஒட்டக் கூடியதாக இருக்கவேண்டும். அந்த மாதிரி பிசின் போல் உள்ள மாவு கோதுமை மாவு ஒன்றுதான். தான்யங்கள் எல்லாவற்றிலும் அத்தகைய க்ளூட்டன் என்னும் ஊன் சத்து இருக்கவே செய்கிறது. ஆனால் கோதுமையில் தான் அது அதிகமான அளவு இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/146&oldid=1538374" இலிருந்து மீள்விக்கப்பட்டது