உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/150

விக்கிமூலம் இலிருந்து


150அப்பா! பாலை பாட்டிலில் ஊற்றி அடைத்து வைத்தால் நேரமானதும் திடீரென்று அடைப்பான் துள்ளி வெளியே போய் விழுந்துவிடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம் அம்மா! அந்த மாதிரி சில வேளைகளில் நேர்வதுண்டு. பாட்டிலில் உள்ள பால் புளித்துவிட்டால் அப்பொழுது அதில் உண்டாகும் வாயு விரிந்து அடைப்பானை வெளியே தள்ளிவிடும்.

அம்மா! பால் புளியாவிட்டாலும் பாலுக்கு மேலாக நிற்கும் காற்று அதிக உஷ்ணமான சமயங்களில் விரிந்து விசையொடு அடைப்பானைத் தூக்கி எறிந்துவிடும்.

பாலை நிறைய ஊற்றிப் புளிக்காத படி குளிர்ந்த தண்ணீருக்குள் வைத்திருந்தால் இந்த மாதிரி அடைப்பான் துள்ளி வெளியே போவது ஏற்படாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/150&oldid=1538414" இலிருந்து மீள்விக்கப்பட்டது