17 B
மறவர் சீமை
என்பவர் தமது சாட்சியத்தில் 1801ம் வருடம் மார்ச்சு மாதம் கைதியாக உள்ள மயிலப்பனும் இருபது ஆட்களும் மனலூர் கிராமத்தைச் சூழ்ந்து, அவரையும், அவரது தகப்பனாரையும் பிடித்து அவர்களிடத்தில் 500 சக்கரம் பணம் கோரியதாகவும், அந்தத் தொகை கிடைக்காததால், அவர்களைப் புளியமர விளாரிகளால் அடித்ததாகவும் சொன்னார். மேலும், அவர்களைக் கொடுமலுாருக்கு கொண்டு வரும்படி மயிலப்பன் உத்திரவிட்டபொழுது, தொகையை அன்று மாலையில் கொடுப்பதாகச் சொன்னதின்பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார். மீண்டும் ஆகஸ்டு மாதத்தில் அவர்களது ஊருக்கு அண்மையில் உள்ள பெருங்கரையில் இருந்து கொண்டு அவரது தகப்னாரிடம் சில சேவகர்களை அனுப்பி வைத்ததாகவும், அவர்களுடன் ஏழுகலம் நெல்லுடன் சென்று அவரது தந்தை மயிலப்பனிடம் அந்த நெல்லைக் கொடுத்து திரும்பியதாகவும் சொன்னார்.
முதுகளத்துார் அம்பலகாரர் முத்தையா பிள்ளை பின்னர் விசாரிக்கப்பட்டார். அவரது வாக்குமூலத்தில் ஏப்ரல் 1801ல் ஒருநாள் பொழுதடைந்த நேரம் மயிலப்பனும், சிங்கன் செட்டியும் முதுகுளத்துர் கச்சேரிக்கு வந்து சிப்பாய்களது ஆயுதங்களைப் பறித்தனர். அப்பொழுது மரக்கானன். அம்பலக்காரருக்குத் தொடையிலும், காவல்காரருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது என்று அதனைக் கண்டு பயந்து ஓடியதாகவும் சொன்னார். நான்கு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு குழுவினர் அங்கு வந்து அமில்தாரிடம் பணம் கேட்டதாகவும் அவர் கொடுக்க மறுத்து அவர்களுடன் சண்டை போட்டதாகவும், அப்பொழுது உமையாரின் ஆள் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் சற்று தொலைவில் நினறு கொண்டு இருந்ததால், அந்தக் கூட்டத்தில் மயிலப்பன் இருந்தாரா என்பது தனக்குத் தெரியாது என்றும் சொன்னார்.
1801ம் வருடம் ஜூன் மாதத்தில அமில்தார் ஆப்பனுளரில் இருந்துகொண்டு அவரை அழைத்து வர ஆட்களை