இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
சுளிக்கச் சொல்லேல்.48
சூது விரும்பேல்.49
செய்வன திருந்தச் செய்.50
சேர் இடம் அறிந்து, சேர்.51
'சை!' எனத் திரியேல்.52
சொல் சோர்வுபடேல்.53
சோம்பித் திரியேல்.54
‘தக்கோன்' எனத் திரி.55
தானமது விரும்பு.56
திருமாலுக்கு அடிமை செய்.57
தீவினை அகற்று.58
துன்பத்திற்கு இடம் கொடேல்.59
தூக்கி, வினை செய்.60
தெய்வம் இகழேல்.61
தேசத்தோடு ஒத்து வாழ்.62
தையல் சொல் கேளேல்.63
தொன்மை மறவேல்.64
தோற்பன தொடரேல்.65
நன்மை கடைப்பிடி.66
நாடு ஒப்பன செய்.67
நிலையில் பிரியேல்.68
நீர் விளையாடேல்.69
நுண்மை நுகரேல்.70
நூல் பல கல்.71
நெற்பயிர் விளை72
நேர்பட ஒழுகு.73
நைவினை நணுகேல்.74
நொய்ய உரையேல்.75
நோய்க்கு இடம் கொடேல்.76
பழிப்பன பகரேல்.77
பாம்பொடு பழகேல்.78
பிழை படச் சொல்லேல்.79
பீடு பெற நில்.80