உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

தெய்வம் சீறின், கைதவம் மாளும்.43
தேடாது அழிக்கின், பாடாய் முடியும்.44
தையும் மாசியும் வைஅகத்து உறங்கு.45
தொழுது ஊண் சுவையின், உழுது ஊண் இனிது.46
தோழனோடும் ஏழைமை பேசேல்.47

நல் இணக்கம் அல்லது அல்லற்படுத்தும்.48
நாடு எங்கும் வாழ, கேடு ஒன்றும் இல்லை.49
நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.50
நீர் அகம் பொருந்திய ஊரகத்து இரு.51
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.52
நூல் முறை தெரிந்து, சீலத்து ஒழுகு.53
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.54
நேரா நோன்பு சீராகாது.55
நைபவர் எனினும், தொய்ய உரையேல்.56
நொய்யவர் என்பவர்வெய்யவர் ஆவர்.57
நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை.58

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.59
பாலோடு ஆயினும், காலம் அறிந்து உண்.60
பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.61
பீரம் பேணி பாரம் தாங்கும்.62
புலையும் கொலையும் களவும் தவிர்.63
பூரியோர்க்கு இல்லை, சீரிய ஒழுக்கம்.64
பெற்றோர்க்கு இல்லை, சுற்றமும் சினமும்.65
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.66
பையச் சென்றால், வையம் தாங்கும்.67
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.68
போனகம் என்பது தான் உழந்து உண்டல்.69

மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.70
மாரி அல்லது காரியம் இல்லை.71
மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.72
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.73

நீ. க.—2