இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்.74
மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்.75
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.76
மேழிச் செல்வம் கோழைபடாது.77
மை விழியார்தம் மனை அகன்று ஒழுகு.78
மொழிவது மறுக்கின், அழிவது கருமம்.79
மோனம் என்பது ஞான வரம்பு.80
வளவன் ஆயினும், அளவு அறிந்து, அழித்து, உண்.81
வானம் சுருங்கின், தானம் சுருங்கும்.82
விருந்து இலோர்க்கு இல்லை, பொருந்திய ஒழுக்கம்.83
வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும்.84
உரவோர் என்கை இரவாது இருத்தல்.85
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.86
வெள்ளைக்கு இல்லை. கள்ளச் சிந்தை.87
வேந்தன் சீறின், ஆம் துணை இல்லை.88
வையம்தோறும் தெய்வம் தொழு.89
ஒத்த இடத்து நித்திரை கொள்.90
ஓதாதார்க்கு இல்லை, உணர்வொடும் ஒழுக்கம்.91