22
வேங்கை வரிப் புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற்போல், பாங்கு அறியாப்
புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.15
'அடக்கம் உடையார் அறிவு இலர்' என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா;—மடைத் தலையில்
ஓடு மீன் ஓட உறு மீன் வரும் அளவும்,
வாடி இருக்குமாம், கொக்கு.16
அற்ற குளத்தின் அறு நீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக் குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார். உறவு.17
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என் ஆகும்?—சீரிய
பொன்னின் குடம் உடைந்தால், பொன் ஆகும்; என் ஆகும்,
மண்ணின் குடம் உடைந்தக்கால்?18
ஆழ அமுக்கி முகக்கினும், ஆழ் கடல் நீர்
நாழி முகவாது. நால் நாழி;—தோழி!—
நிதியும் கணவனும் நேர்படினும், தம்தம்
விதியின் பயனே பயன்.19
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா;
உடன் பிறந்தே சொல்லும் வியாதி; உடன் பிறவா
மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்;
அம் மருந்து போல்வாரும் உண்டு.20
இல்லாள் அகத்து இருக்க, இல்லாதது ஒன்று இல்லை;
இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின், இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ் இல்
புலி கிடந்த தூறு ஆய்விடும்.21
எழுதியவாறே காண்—இரங்கும் மட நெஞ்சே!—
கருதியவாறு ஆமோ,கருமம்? கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்.
முற்பவத்தில் செய்த வினை.22