27
வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே;
பாதாள மூலி படருமே மூதேவி
சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே;—
மன்று ஓரம் சொன்னார் மனை.23
நீறு இல்லா நெற்றி பாழ்; நெய் இல்லா உண்டி பாழ்
ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்: மாறு இல்
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்; பாழே,
மடக்கொடி இல்லா மனை.24
ஆன முதலில் அதிகம் செலவு ஆனால்,
மானம் அழித்து, மதி கெட்டு, போன திசை
எல்லார்க்கும் கள்ளன் ஆய், ஏழ் பிறப்பும் தீயன் ஆய்,
நல்லார்க்கும் பொல்லன் ஆம்; நாடு!25
மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை,
தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல்,—பத்தும்
பசி வந்திடப் போம் பறந்து.26
ஒன்றை நினைக்கின், அது ஒழிந்திட்டு, ஒன்று ஆகும்;
அன்றி அது வரினும், வந்து எய்தும்; ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும், நிற்கும்;—
எனை ஆளும் ஈசன் செயல்.27
உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்;
எண்பது கோடி நினைந்து எண்ணுவன; கண் புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை, மண்ணின் கலம் போல,
சாந்துணையும் சஞ்சலமேதான்.28
மரம் பழுத்தால் வௌவாலை,'வா' என்று கூவி,
இரந்து அழைப்பார் யாரும் அங்கு இல்லை; சுரந்து அமுதம்
சுற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்.
உற்றார், உவகத்தவர்.29
தாம் தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார்,
பூந்தாமரையோன் பொறி வழியே;—வேந்தே!—
ஒறுத்தாரை என் செயலாம்? ஊர் எல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி?30
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று; சால
ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று; வழுக்குடைய
வீரத்தின் நன்று விடா நோய்; பழிக்கு அஞ்சாத்
தாரத்தின் நன்று, தனி31