உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி
(சிவப்பிரகாச சுவாமிகள்)

கடவுள் வாழ்த்து

மின் எறி சடாமுடி விநாயகன் அடி தொழ,
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.


நூல்


என்றும் முகமன் இயம்பாதவர்கண்ணும்,
சென்று பொருள் கொடுப்பர். தீது அற்றேர்; துன்று சுவை—
பூவின் பொலிகுழலாய்—பூங் கை புகழவோ,
நாளிற்கு உதவும் நயந்து?1

மாசு அற்ற நெஞ்சு உடையார் வன்சொல் இனிது; ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிது என்க! ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ,—நன்னுதால்!- ஒண் கருப்பு
வில்லோன் மலரோ, விருப்பு?2

தங்கட்கு உதவிலர் கைத் தாம் ஒன்று கொள்ளின், அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க!—தங்க நெடுங்
குன்றினால் செய்தனைய கொங்கையாய்!—ஆவின்பால்
கன்றினால் கொள்ப, கறந்து.3

பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ் செல்வம் வேறு
பிறர்க்கு உதலி ஆக்குபவர் பேறு ஆம்;—பிறர்க்கு உதவி
செய்யாக் கருங் கடல் நீர், சென்று பயல், முகந்து,
பெய்யாக் கொடுக்கும், பிறர்க்கு.4

நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்,
நோக்கின், அவர் பெருமை நொய்து ஆகும்;—பூக் குழலாய்!—
நெல்லின் உமி சிறிது நீங்கி, பழமைபோல்
புல்லினும், திண்மை நிலை போம்.5