உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

'தொலையாப் பெருஞ் செல்வத் தோற்றத்தோம்?' என்று,
தலையாயவர் செருக்குச் சார்தல் இலையால்;—
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈர்ங்கோ தாய்!—மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு.14

இல்லானுக்கு அன்பு இங்கு, இடம் பொருள் ஏவல் மற்று
எல்லாம் இருந்தும், அவற்கு என் செய்யும்?—நல்லாய்!—
மொழி இவார்க்கு ஏது முதுநூல்? தெரியும்
விழி இலார்க்கு ஏது விளக்கு?15

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து, உயர்ந்தோர்,
தம்மை மதியார், தசை அடைந்தோர் தம்மின்
இழியினும், செல்வர், இடர் தீர்ப்பர்;—அல்கு
கழியினும் செல்லாதோ, கடல்?16

'எந்தை நல்கூர்ந்தான், இரப்பார்க்கு ஈந்து' என்று அவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ?—பைந்தொ டீஇ!—
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்றும் உதவும் கனி.17

இன்சொலால் அன்றி, இரு நீர் வியன் உலகம்.
வன்சொவால் என்றும் மகிழாதே;—பொன் செய்
அதிர் வளையாய்!—பொங்காது அழற் கதிரால், தண்ணென்
கதிர் வரவால் பொங்கும், கடல்.18

நல்லோர் வரவால் நகை முகம் கொண்டு இன்புறீஇ,
அல்லோர் வரவால் அழுங்குவார், வல்லோர்;—
திருந்தும், தளிர் காட்டித் தென்றல் வரத் தேமா;
வருந்தும், சுழல் கால் வர.19

பெரியவர் தம் நோய்போல், பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க:—தெரியிழாய்!—
மண்டு பிணியால் வருந்து பிற உறுப்பைக்
கண்டு, கலுழுமே, கண்.20

எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலை ஆம்;—எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடை முன் கண்ட அளவில்
வீயும், கர நீர் மிகை.21