ஆசிரியர் பேச்சு:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic சந்தி இலக்கணப்படி தலைப்பு
சந்தி இலக்கணப்படி தலைப்பு
[தொகு]@Neyakkoo தலைப்பில் உள்ள ஒரு சொல்லான, 'சிவ' என்பது 'சிவப்' என சந்தி இலக்கணப்படி வர வேண்டும். புரிதலுக்காக விளக்கம் தருக. தகவலுழவன் (பேச்சு). 03:16, 20 ஏப்பிரல் 2024 (UTC)
- நிலைமொழியில் உள்ள மகர மெய் ஈற்றுச் சொற்கள், வருமொழியின் முதலில் வரும் உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் நாற்கணங்களோடு புணரும்போது, இறுதியில் உள்ள மகர மெய் கெட்டு (நீங்கி), உயிர் ஈறாய் நிற்கும். அவ்வாறு நிற்கும் உயிர் ஈற்றின் முன்னர், வருமொழி முதலில் உயிர்கள் வந்தால் அவை உடம்படுமெய் பெறும்; வல்லினம் வந்தால் வருகின்ற அவ்வல்லின எழுத்து மிகும்; மெல்லினமும் இடையினமும் வந்தால் அவை இயல்பாகும்.
- மவ்வீறு ஒற்றுஅழிந்து உயிர்ஈறு ஒப்பவும்; வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் (நன்னூல், 219) (மவ்வீறு – மகரமெய் ஈறு; ஒற்று – மகரமெய்; அழிந்து – கெட்டு; உயிர்ஈறு ஒப்பவும் - உயிர் ஈற்றுச் சொற்களைப் போலப் புணர்வனவும்)
- தமிழ் இணையக் கல்விக்கழகப் பக்கம்
- நேயக்கோ (பேச்சு) 03:54, 20 ஏப்பிரல் 2024 (UTC)
- நன்றி. விக்கிப்பீடியாவிலும், விக்கிமூலத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த, இக்குறிப்புகள் உறுதுணையாக இருக்கின்றன. தொடர்ந்து இணைந்து செயற்படுவோம். Info-farmer (பேச்சு) 04:58, 21 ஏப்பிரல் 2024 (UTC)