உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கூறமாட்டான். ஆனால் ஆண்டவனான அக்கினி தன் மனைவியிடம் தான் ரிஷி பத்தினியிடம் காமுற்று இருப்பதை கூறியவுடன் தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படிக் கேட்டானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியரைப் போலவே உருவமெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம் ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவம் எடுக்க முடியவில்லை என்றும், அதற்குக் காரணம், அருந்ததி ஆதிதிராவிட பெண்மணி என்றும் புராணம் மேலும் தொடருகிறது.

பிறர் மனைவியைக் காமுறும் தீயகுணம் படைத்த அக்கினியையா நம்முடைய திருமணக் காலங்களிலே சாட்சிக்கு அழைப்பது? கூடாது, கூடவே கூடாது ஆகவேதான் அக்கினி வளர்ப்பதில்லை.

இப்படித்தானே மற்ற கடவுள்களும் இருக்கிறார்கள்! புராணங்கள் சொல்லுகிறபடியே பார்த்தாலும் எந்தக் கடவுளும் யோக்கியமான கடவுளாகத் தெரியவில்லையே! பிரமன் திலோர்த்தமையை கெடுத்தான். சிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைக் காமுற்றான். இந்திரன் அகலிகையையும், சந்திரன் குருபத்தினி தாரகையையும் மகா விஷ்ணு சத்திரன் மனைவியையும் கெடுத்தனர் இப்படித்தான் புராணங்கள் சொல்லுகின்றன.

இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான கடவுளரையா நாம் நமது வாழ்வின் வழிகாட்டியாகக் கொள்வது?

காமக் குரோதம் மிகுந்த அக்கினி பகவானை அழைத்து அவனைச் சாட்சியாக வைத்துத் திருமணம் நடத்துவது அறிவுக்குப் பொருத்தமானது தானா? அதைப்போலவே