உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


அது வருது, மூக்கு மேலே கோபம் அதுக்கு நாம்ப களங்கமத்து பேசிக்கிட்டு இருந்தாக்கூட, என்னமோ ஏதேன்னு சந்தேகப்பட்டுக்கிட்டு சண்டைக்கு வந்துவிடும். நீங்க போய்வாங்க டாக்டரய்யா--பக்கத்துக் கிராமம்--சன்னாசி அவனையே கேட்டுப்பாருங்க, கிழவியோட சமாசாரம் புரிந்துபோகும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

000

சன்னாசி பெரிய குடும்பஸ்தன்--நாணயமானவன்.

பெரிய வைக்கோற்போரை சரிப்படுத்திக் கொண்டிருந்தான். டாக்டர் அவனைப் பார்க்கச் சென்றபோது!

"ஆமாங்க! என் மானத்தை வாங்கவே அந்தக் கிழம் அப்படிச் செய்வது, தலை இறக்கமாகத்தான் எனக்குயிருக்குது. தடியாட்டமா நான் இருக்கிறேன். சோத்துக்கு துணிக்கு குறைச்சல் கிடையாதுங்க இங்கே வந்து விழுந்து கிடன்னு ஆயிரம் தடவை வந்து செஞ்சிக் கேட்டாச்சிங்க ஒரே பிடிவாதமா வரமாட்டேங்குது--அங்கே பட்டினி கிடக்குது--பிச்சை எடுக்குது--எனக்கு அவமானம் தாங்க முடியலிங்க,"

"என்ன விரோதம் உன்னிடம் உன் சொந்த தாயார் தானே?"

"என்னைப் பெத்தவங்கதான். குழந்தையிலேயே என்னை இங்கே கொடுத்துவிட்டாங்க இங்கேன்னா இதுவும அன்னியரில்லே, அசலாரில்லே - எங்க சின்னம்மா வீடுதான்.

"உங்க சின்னம்மாவிடம் விரோதமா?"