77
தேடிக்கொள்ள முடியவில்லை; அதுதான் குற்றம் என்று இடித்துக் கூறினான் அந்த இணையில்லாத வீரன்.
மான் குற்றம் செய்யலாமா, புலியார் தண்டிக்கிறார்! ஏன் மான் அழகான கண்களைக் காட்டிற்று? புள்ளிமான் துள்ளி விளையாடுவதா?கள்ளங்கபடமற்று ஓடுவதா! சருகு உதிரும் சத்தம் கேட்டாலும் மருண்டு ஓடுவது ஒரு குற்றமல்லவா! சாதுவாக இருப்பது மற்றோர் குற்றம்! பதுங்கிப் பாய்வது, பல்லால் கடிப்பது, நகத்தால்கிழிப்பது, இரததம் குடிப்பது, உறுமுவது போன்ற ஒரு நற்பண்பு இல்லை! இவைகளைப் பெறாதிருத்தல் குற்றமல்லவா? புலியார். எத்தனை குற்றங்களைத்தான் பொறுப்பார்! ஆகவேதான் குற்றம் செய்த மானைத் தண்டித்தார்!
டிரைபஸ் செய்த குற்றமும இவ்விதமானதே!
இதனை, இறுமாப்பாளருக்கே இடித்துக்கூற, ஒருவர் தான் முன்வந்தார். ஒரு பலனுங் கருதாது முன்வந்தார். தன் தலைசோகுமே என்ற பயமின்றி முன்வந்தார். எதிர்ப்புச்சக்தியின் தன்மையும் அளவையும் பொருட்படுத்தாது முன்வந்தார் நீதியை நிலைநாட்ட-- கைவிடப்பட்டவனைக் காப்பாற்ற ஒரே ஒருவர்தான் வரமுடியும், ஒப்பற்ற உள்ளப் பண்புடையோர் மந்தையாக இரார், ஒரே ஒருவர்தான்; அவர்தான் ஏழைப்பங்காளர் எமிலிஜோலா! பிரான்சு நாடு மௌனம் சாதித்தபோது ஜோலா உண்மையை உரைத்தார். டிரைபஸ் குற்றமற்றவன் என்று.
எமிலிஜோலாவுக்குத் தவிர, வேறு யாருக்கும் அந்த உறுதியான உள்ளம் இருக்க முடியாது. அநீதி பெருநெருப்பெனக் கொழுந்து விட்டெறியும்போது, அதனை அணைக்கத் துணிவது அனைவருக்கும் சாத்தியமாகக் கூடிய செயலல்ல! ஜோலாவால் முடியும்! ஜோலா அப்படிப்பட்ட ஆற்றல்