உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


விலை போக வில்லை.ஏனெனில் தங்களைப்பற்றிய முழு உண்மையை உணர மக்கள் மனங்கூசினர். புத்தகக்கடைக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை.

சாதாரண ஜோலா இலக்கிய உலகில் புகுந்து விட்டார். புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகக்கிளம்பின. மலை யுச்சியிலிருந்து விரைந்து வரும் பேராறுகளைப் போல கட்டுரைகள் ஜோலாவின் பேனாமுனையிலிருந்து கிளம்பின. அவருடைய நாவல்களனைத்தும் அடிப்படையான கருத்துக்களின் மீது கட்டப்பட்டவை, கற்பனையில் கனி தருகிற கற்பகத் தருவைவிட, குப்பைமேட்டில் சேர்ந்திருக்கிற முட்செடி ஜோலாவுக்கு மேலானதாயிருந்தது. தான் கண்ட உண்மைகளை எழுச்சி தரும் வகையில் அவர் உலகுக்கு எடுத்துக் காட்டினார், சமூக அமைப்பில் கண்ட ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டினார். கொடுங்கோலர்களை எதிர்த்தார்; குரு மக்களைச் சரடினார். அவருடைய நாவல்களில் நிலையற்றோர், வஞ்சகர், அனாதைகள், ஆணவக்காரர், திருடர், சோம்பேரிகள், குடிகாரர், கனவு காண்போர், நலிந்த உழைப்பாளர், கொடிய முதலாளிகள், பேராசைப் பாதிரிமார், முதுகெலும்பற்ற கலைவாணர், வெறிகொண்ட மதப் பித்தர். அனைவரும் சித்தரிக்கப்பட்டனர்.

சாதாரண குடும்பத்தினரின் வரலாற்றை விளக்கமாகத் தொடர்ந்து எழுதுவதென ஜோலா 1871-ல் தொடங்கிச் சுமார் 50 ஆண்டுகளில் 20 நாவல்கள் வெளியிட்டார். ஒவ்வொரு நாவலும் வாழ்க்கைப் பகுதியை தனித் தனியாக விளக்குவது. மார்க்கட்டைப் பற்றிய நாவலில் பணத்திற்காகச்செய்யப்படும் மோசடிகள் கூறப்பட்டுள்ளன. அடுத்த நாவல் குடியைப் பற்றியது. அது 1877-ல் வெளி வந்தது எழுதிய நாவல்களில் முதலில் மக்களை அவர் பக்கம் இழுத்தது அந்த நாவல் தான்.