பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

________________

91 குறிப்பெடுத்தான். பெரும் போருக்கு ஆட்கள் திரட்டு வதைப்போல ஜோலா சமூக அநீதிகனைத் திரட்டிக் கொண் டிருந்தான். இரவில் வெகுநேரம்வரை பாரிஸ் நகரத்துச் சேரிகளில் அவன் உலவுவான். வீதியோரத்திலும், சாக் கடைப்பக்கங்களிலும், இடிந்த மனைகளிலும் ஆற்று படிக்கட் டுகளிலும் பெருவாரியான மக்கள் குளிர் பொறுக்க மாட் டாது அடைந்து கிடப்பதைக் கண்ணுற்றான். இருட்டின் கறைகள், இருண்ட வாழ்வினர் தொங்கும் நரம்பின் குப்பை கள், சமூக பலி பீடத்தில் சாய்ந்த மாந்தர் அனைவரையும் கண்ணுற்றான். ஜோலா சிறுசிறு கட்டுரைகள் எழுதி, பத்திரிகைக்காரர் களிடமிருந்து உதவி பெறுவான். புத்தகக் கடைச் சொந்த காரருக்கு ஜோலாவின் போக்குப் பிடிக்கவில்லை. அவனு டைய "கீழ்த்தரமான 'கட்டுரைகளால் கடையின் மதிப்புக் கெட்டு விடுமென அவர் பயந்தார். அதற்கேற்றார்போல் கலைச்சீமான்களையும், அரசியல் கனதனவான்களையும கடுமை யாகக் கண்டித்து ஜோலா எழுதிய புத்தகம் ( ோலீசாரின் கவனத்துக்கு வந்தது. ஜோலாவும் வேலையைவிட்டு நீக்கப் பட்டான். 1882-ம் ஆண்டு முதல், அதாவது அவனுடைய 22-ம் வயதிலிருந்து ஜோலா தன் பேனாவை நம்பியே வாழ வேண் டிவந்தது. ஜோலா மனங் குலையவில்லை; உறுதியுடன் தன் போராட்டத்தைத் துவக்கினான். ஒவ்வொரு மணி நேரத் திற்கும் அட்டவணை போட்டுக் கொண்டு சலியாது அவன் உழைத்தான். நூல்களைப் பதிப்பிக்க அவனுடைய நண்ப ரொருவர் முன் வந்தார். ஜோலாவின் கதைகள் கட்டுரை கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தன. அவைகள் சமூகத்தின் அநீதியையும் அரசியல் அக்ரமத்தையும் வன்மை யாகக் கண்டித்தன. முதலில் அவனுடைய புததகங்கள்