பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

________________

90 யாரிஸ் பட்டணத்திலே நிலைத்திருக்கவே இருந்தது. முடியாத நிலை ஜோலாவும் அவனுடைய நண்பன் பால் செஸானே என்பவனும் அந்த ஊருக்கு மிகுந்த நம்பிக்கையுடன் தான் வந்தார்கள். பொழுதுபோவதுகூடத் தெரியாமல் இரு வரும் சிறிய வாடகை அறையில் உட்கார்ந்து திட்டமிடுவார் கள். செஸானே தன் ஓவியத் திறமையால் உலகையே ஆட்டமுடியும் என்பான்; ஜோலா தன் எழுத்தாண்மை யால் வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாம் எனக் கனவு காண்பான். கையிலிருந்த காசு குறையக் குறைய, அவர் களுடைய உற்சாகமும் குன்றியது. மிகச் சுலபத்தில் கட்டப் பட்ட கற்பனைக் கோட்டைகள் வெகு விரைவில் தரைமட்ட மாயின. மிகுந்தவை இருட்டறையில் உலாவுகிற செஸா னேயும வறுமைச் சக்தியில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜோலாவும் தான். ஜோலாவுக்குப் பாரிஸ் நகரத்துப் பெயர்பெற்ற புஸ் தகக் கடையொன்றில் வேலை கிடைத்தது. புஸ்தகங் களை அடுக்கி மூட்டைகட்டும் வேலைதான் செய்தான். அதற்காகக் கிடைத்த சிறுவருவாய் அவர்களது 'எப் பொழுதும் வறுமை' என்ற நிலையை ஒழித்தது. ஜோலா வுக்கு இப்பொழுதுதான் தன்னைச் சுற்றிலும் பார்த்து நுணுக்கங்களை உணர நேரம் கிடைத்தது. உள்ளே வறு மையாலும் துன்பத்தாலும் துடித்துக்கொண்டிருந்த உலகின் ஒவ்வொரு பகுதியையும் நன்கு ஆராய ஆரமபித் தான். அவன் ஆராய விரும்பிய உண்மைகள் மேல் பூச்சின்றி, மறைக்கப்படாததால் சந்து பொந்துகளில் பொதிந்து கிடந்தன. ஒவ்வொரு உண்மையும் வைரத் தைப்போனறு அவனுக்குப் பிரகாசித்தது. சோர்வும் வெறுப்பும் கொள்ளாமல் ஜோலா தான் பார்த்தவைகளைக்