பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

________________

89 உண்மையொளி காண அதே. செலவழிக்கப்பட்டது. விருப்பத்தால்தான் இந்த வழக்கில் ஈடுபட்டேன்.பலமான இராணுவத்தையும் அதிகாரமுள்ள அரசாங்கத்தையும் எதிர்க்க முடியுமா? என என் நண்பர்கள் என்னைத் தடுத் தனர். தனி மனிதர்களின் சிதைவில் நீதி சிறக்குமாயின் அதனால் பலன் பெரிதே... வரலாற்றில் மறக்கமுடியாத பெரும் குற்றத்தை இந்த நீதி மன்றம் செய்துவிட்டது. நீதிக்கு வழிகாட்டிய எனது புகழ்மிக்க தாயகம் அநீதிக்கு எடுத்துக்காட்டாக ஆக்கப்படுவதை நான் ஒப்பவில்லை... பிரெஞ்சு நாட்டின் முன்னால், உலகின் முன்னால், அழுத் தமாகக் கூறுகிறேன்:டிரைபஸ் குற்றமற்றவன் என்னுடைய நாற்பதாண்டு உழைப்பின் மீது, நாட்டிலே பரவிய புதிய உண்மையுணர்வின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். டிரை பஸ் குற்றமற்றவன்! நான் அழிந்து போவேன்...என் புகழ் மங்கிப்போகலாம்... எனினும் டிரைபஸ் குற்றமற்றவன்!" ஜோலா போராடினார். விசாரிக்கு முன்பே முடிவு கட் டப்பட்ட வழக்கில் நீதிக்கு இடமெப்படி இருக்க முடியும்? ஓராண்டு சிறைத்தண்டனையும், மூவாயிரம்பிராங்கு அபரா தமும ஜோலாவுக்கு விதிக்கப்பட்டது. இராணுவத்தினர் குதூகளித்தனர். வெளியில் கூடி யிருந்த கூட்டம் "இராணுவம் வாழ்க! வீழ்க ஜோலா' என முழங்கியது. "என் புகழ் மங்கிப் போகலாம். ஆனால் டிரைபஸ் குற்றமற்றவன்!!" ஜோலாவின் முழக்கம் அது. புகழ் மங்க வில்லை. பெரியதோர் ஒளியைப் பரப்பிக்கொண்டு கிளம் பிற்று, டிரைபசும் விடுதலை பெற்றான். அதுபிறகு, ஆனால் முதலில் வெற்றி இராணுவத்தினருக்கு. "வீழ்க ஜோலா முதலில். பிறகு 'வாழ்க ஜோலா முதலில், ஜோலா