பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


குறிப்பெடுத்தான். பெரும் போருக்கு ஆட்கள் திரட்டுவதைப்போல ஜோலா சமூக அநீதிகனைத் திரட்டிக் கொண்டிருந்தான். இரவில் வெகுநேரம்வரை பாரிஸ் நகரத்துச் சேரிகளில் அவன் உலவுவான். வீதியோரத்திலும், சாக்கடைப் பக்கங்களிலும், இடிந்த மனைகளிலும் ஆற்று படிக்கட்டுகளிலும் பெருவாரியான மக்கள் குளிர் பொறுக்க மாட்டாது அடைந்து கிடப்பதைக் கண்ணுற்றான். இருட்டின் கறைகள், இருண்ட வாழ்வினர் தொங்கும் நரம்பின் குப்பைகள், சமூக பலி பீடத்தில் சாய்ந்த மாந்தர் அனைவரையும் கண்ணுற்றான்.

ஜோலா சிறுசிறு கட்டுரைகள் எழுதி, பத்திரிகைக்காரர்களிடமிருந்து உதவி பெறுவான். புத்தகக் கடைச் சொந்தகாரருக்கு ஜோலாவின் போக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய "கீழ்த்தரமான 'கட்டுரைகளால் கடையின் மதிப்புக் கெட்டு விடுமென அவர் பயந்தார். அதற்கேற்றார்போல் கலைச்சீமான்களையும், அரசியல் கனதனவான்களையும கடுமையாகக் கண்டித்து ஜோலா எழுதிய புத்தகம் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. ஜோலாவும் வேலையைவிட்டு நீக்கப் பட்டான்.

1882-ம் ஆண்டு முதல், அதாவது அவனுடைய 22-ம் வயதிலிருந்து ஜோலா தன் பேனாவை நம்பியே வாழ வேண்டிவந்தது. ஜோலா மனங் குலையவில்லை; உறுதியுடன் தன் போராட்டத்தைத் துவக்கினான். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அட்டவணை போட்டுக் கொண்டு சலியாது அவன் உழைத்தான். நூல்களைப் பதிப்பிக்க அவனுடைய நண்பரொருவர் முன் வந்தார். ஜோலாவின் கதைகள் கட்டுரைகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தன. அவைகள் சமூகத்தின் அநீதியையும் அரசியல் அக்ரமத்தையும் வன்மையாகக் கண்டித்தன. முதலில் அவனுடைய புத்தகங்கள்