பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


1880-ல் "நானா" வெளிவந்தது. "லாபெட்டே ஹுமன்னே" என்பது புகைவண்டிகளைப் பற்றியது. "ஜெர்மினல்' சுரங்கங்களின் இருண்ட வாழ்வைப் படம்பிடிப்பது. பெரும் முதலாளிகளின் சுரண்டல் போக்கை வெட்ட வெளிச்சமாக்கியது, "வார்ஜெந்த்" உலக வரலாற்றில் எழுந்த முதல் தொழிலாளர் அரசாங்கம் உள் நாட்டு முதலாளிகளாலும் பிரஷிய பிரபுக்களாலும் நெரிக்கப்பட்டுத் தொழிலாளரின் இரத்தமும், ஏழையின் கண்ணீரும் சிந்தப் பட்ட 1870-ம் ஆண்டைப் பற்றிய 'வீழ்ச்சி" ஜோலாவின் நாவல்களில் உயர்ந்த வகையில் ஒன்றாகும். "லூவார்ட்ஸ் என்ற நாவல் மதத்தின் மூட நம்பிக்கைகனைச் சிதறடித்தது.

போராடிப் பெற்ற நிலையை, ஒரு துர்ப்பாக்கியனுக்கு நீதி தேடித்தரத் துணிந்ததால் இழந்த ஜோலா சிறை புக வேண்டுமென்று "தீர்ப்பு" கிடைத்தது.

ஜோலாவின் இடையறாத உழைப்பிற்கு அவரடைந்த பலன்!

நாட்டை விட்டு ஓடிப்போகும்படி நண்பர்கள் கூறினர் அது "கோழைத்தனம்' என ஜோலா உதறித் தள்ளினார் பக்கத்திலிருந்த நண்பர் அவரைத் தட்டி 'ஜோலா பாரீஸ் சிறையில் வாடுவதில் பலனில்லை. வெளி நாட்டுக்குச் செல் அங்கிருந்து டிரைபஸ் வழக்குப் பற்றி கட்டுரைகள் அனுப்பு ஓடிப்போவதால் நீ கோழையாக மாட்டாய். தாய் நாட்டை விட்டு, மனைவி நண்பர்களை விட்டு ஓடுகிறாய், உன் கருத்தை --லட்சியத்தைப் புறக்கணித்தல்ல. சில சமயங்களில் கோழைப் பட்டத்தை ஏற்றுக்கொள்ளப் பெரியவீரம் வேண்டும்" என்றார். ஜோலா அதை ஏற்றுக் கொண்டார். 1897-ம் ஆண்டு அவரது 57-ம் வயதில் ஜோலா இங்கிலாந்துக்கு ஓடினார்.