உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


ஜோலாவின் வெடிகுண்டு தூரத்திலிருந்து வீசப்பட்டது. 'அரோரி' பத்திரிகை இடைவிடாது உழைத்தது உண்மை கிளம்பி விட்டது. அதைத் தடுக்க எவராலும் முடியாது.

ஐரோப்பிய நாடு அரசியலிலே இரண்டாகப் பிரிந்தது ஒரு பக்கத்தில் வெறிபிடித்த இராணுவம், பிரபு அரசவம்சம் மதத்திற்கும் கலைக்கும் பாதுகாப்பளிக்கிற குருமார் கூட்டம் மறு பக்கத்தில் மெதுவாகத் தலை தூக்குகிற புத்துணர்ச்சி.

பிரெஞ்சு மந்திரி சபை மாறியது. உண்மைத் துரோகி எஸ்டர் ஹேஸி நாட்டை விட்டோடினான். முன் வழக்கை ஜோடித்த வழக்கறிஞர் டார்ட் வேலையிலிருந்து நீக்கப்பட்டான். டிரைபஸ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

1899-ல் பிரான்சு நாட்டுக்கு ஜோலா, திரும்பினான் மூன்றாண்டுகளுக்கப்பறம் துடிதுடிப்பான இருதயம் ஓய்ந்தது. 1902 செப்டம்பரில் ஜோலா இறந்தார். அவருடைய முயற்சிகள் வீண் போகவில்லை. நீண்டகால வழக்கின்பின் டிரைபஸ் 1906-ல் தூய்மையானவன் என முழு விடுதலையளிக்கப்பட்டு உயர்ந்த இராணுவப் பதவிகள் கொடுக்கடபட்டான்.

அவருடைய கல்லறைக்கருகில் அனேதேல் பிரான்சு உணர்ச்சி மிக்க சொற்பொழிவாற்றினார். "நீதி உண்மை இவைகளைத் தவிர்த்து வேறெதுவும் அமைதியை வழங்காது. ஜோலா உலக உணர்வின் ஆரம்பத்தைக் குறிப்பவர்.

இலக்கியத்தில் ஜோலா அவருடைய ஏடுகளின் அளவினால் மதிப்பெய்தவில்லை. எளிய நடையில் ஒளி விட்ட-