உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


என்று துளியாவது அச்சம் பிறந்ததோ அறியோம். பக்தனின் தூபத்தைப் பெற்றுப் பரவசமடைந்த பண்டிட்ஜி, பழி, பாவம் எதையும் கருதாமல், எந்த பீஜப்பூர் சமஸ்தானத்தால் வளர்க்கப்பட்டாரோ அதே அரசுக்குத் துரோகியாக இசைந்தார்.கோபிநாதர், சாமன்யரா? பண்டிட்ஜி! வேதபுராண இதிகாசம் தெரிந்தவர்! அதாவது, நயவஞ்சகம், அடுத்துக் கெடுத்தல், அணைத்து அழித்தல், கொஞ்சி நஞ்சு தருவது போன்ற முறைகளை ஏராளமாகக்கூறும் ஏடுகளை நன்கு அறிந்தவர், பாரதத்திலே, திருதராஷ்டிரன், எதிரியை அணைத்து அழிப்பதுபற்றிப் படித்திருக்கிறார்! சூரியனையே சக்ராயுதத்தால் மறைத்துப்பொழுது சாய்ந்ததாகக் காட்டி எதிரியைக் கொல்ல அருச்சுனனுக்கு உதவிசெய்த கண்ணன் காட்டும் வழியை அறிந்தனர் கோபிநாத்! பாரதம், எதிரியை அழிக்க, "தர்மாதர்மம்" பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற ஆரியமார்க்கத்தை எடுத்துரைக்க, கோபிநாதருக்கு மட்டுமல்ல, சிவாஜிக்கும் தெரியும் பாரத--இராமாயணக் கதை பூசைக்குரிய இராமன் மரத்தின் பின்புறமிருந்து அம்பு எய்து வாலியைக் கொன்ற கதையை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்ததும், அதைக் கேட்டு ஆனந்தித்ததும். வீண் போகுமா? இப்படிப்பட்ட சமயத்திலே, அந்த இதிகாசங்களிலே தெரிந்து கொண்ட 'முறைகள்' பயன்பட வில்லையானால், அவைகளைப் படித்துத்தான் பயன் என்ன? கோபிநாத பண்டிட் சிவாஜிக்கு அப்சல்கானின் படையை முறியடிக்க; இன்ன யாகம் செய். அதனால் இன்ன அஸ்திரம் கிடைக்கும் என்று யோசனை கூறினாரா? இல்லை! தெய்வத்தை உபாசனை செய் இந்த மந்திரத்தை ஜெபித்துவிட்டுப் போருக்குக் கிளம்பு, என்று உபதேசம் செய்தாரா? அவர் 'குரு'வாக அமரவில்லை. பீஜப்பூர் குடிகெடுக்கும் துரோகியானார். அப்சல்கானுடன் போர் வேண்டாம்--பணிதலாகச் சொல்லி-