பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ♦ அறிஞர் அண்ணா



பணியினில் வழுவிடான்

உழவன், செந்நெல் மணியினை அடித்தெடுத்துக் களஞ்சியம்தனில் சேர்த்திடும் வரையில், தான் மேற் கொண்ட பணியினின்றும் வழுவிடான்!

உழைப்பு -- முயற்சி தேவை

வாழ்க்கைக்கு வளமான பொருள்களைச் சிறிதும் வாட்டமின்றிப் பெற முடியாது; இவற்றைப் பெற ஓயாத உழைப்பும் சலியாத முயற்சியும் வேண்டும்.

வேலை நிறுத்தம் -- விம்மலின் எதிரொலி !

வேலைநிறுத்தம் என்பது, தொழிலாளியின் வீம்புப் போராட்டமல்ல! இரத்தக் கண்ணீர் -- வேதனைப் புயல -- அவனுடைய அவனுடைய இல்லத்திலே குமுறியெழும் விம்மலின் எதிரொலி!

தொழிலாளர் உலகில் வேலைநிறுத்தம், வெறும் பொழுது போக்கு அல்ல; ஆபத்துக்குத் தாமதமாக அச்சாரம் தரும் துணிவு பிறந்த நிலைமை; அந்தத் துணிவும் எளிதில் ஏற்பட்ட சிறிய சம்பவமல்ல தாங்க முடியாத வறுமையின் விளைவு!

பணக்காரன்

பொதுவுடைமைவாதிகட்கு, "முதலாளி யார்?" என்பது புரியவில்லை --தெரியவில்லை; சரிவரப் புரிந்துகொள்ள மனமுமில்லை; 'பணக்காரன்தான் முதலாளி' என்று அவர்கள் தவறாகக் கருதுகின்றனர்; பணக்காரனுக்கும் முதலாளிக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் அறியவில்லை!

பணக்காரன் முதலாளி அல்ல; பணக்காரன்--குளம் குட்டைகளுக்குச் சமமானவன்; முதலாளி -- ஆற்றுக்குச் சமமானவன்; மழை பெய்தால்தான் குளம் -- குட்டைகளில் நீர் இருக்கும் -- இன்றேல் வற்றிவிடும்; ஆனால் ஊற்றோ--