பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அறிஞர் அண்ணா பணியினில் வழுவிடான் உழவன், செந்நெல் மணியினை அடித்தெடுத்துக் களஞ்சியம்தனில் சேர்த்திடும் வரையிலே, தான் மேற் கொண்ட பணியினின்றும் வழுவிடான்! உழைப்பு முயற்சி தேவை வாழ்க்கைக்கு வளமான பொருள்களைச் சிறிதும் வாட்டமின்றிப் பெற முடியாது; இவற்றைப் பெற ஓயாத உழைப்பும் சலியாத முயற்சியும் வேண்டும். - வேலை நிறுத்தம் விம்மலின் எதிரொலி ! . வேலைநிறுத்தம் என்பது, தொழிலாளியின் வீம்புப் போராட்டமல்ல! இரத்தக் கண்ணீர் வேதனைப் புயல் - - அவனுடைய அவனுடைய இல்லத்திலே குமுறியெழும் விம்மலின் எதிரொலி! தொழிலாளர் உலகில் வேலைநிறுத்தம், வெறும் பொழுது போக்கு அல்ல; ஆபத்துக்குத் தாமதமாக அச்சாரம் தரும் துணிவு பிறந்த நிலைமை; அந்தத் துணிவும் எளிதில் ஏற்பட்ட சிறிய சம்பவமல்ல தாங்க முடியாத வறுமையின் விளைவு! பணக்காரன் பொதுவுடைமைவாதிகட்கு, முதலாளி யார்?' என்பது புரியவில்லை தெரியவில்லை; சரிவரப் புரிந்துகொள்ள மனமுமில்லை; 'பணக்காரன்தான் முதலாளி' என்று அவர்கள் தவறாகக் கருதுகின்றனர்; பணக்காரனுக்கும் முதலாளிக்கும் உள்ள வேறுபாட்டை pol அவர்கள் அறியவில்லை! பணக்காரன் முதலாளி அல்ல; பணக்காரன்- குளம் குட்டைகளுக்குச் சமமானவன்; முதலாளி-ஆற்றுக்குச் சமமானவன்; மழை பெய்தால்தான் குளம்-குட்டைகளில் நீர் இருக்கும்--இன்றேல் வற்றிவிடும்; ஆனால் ஊற்றோ