பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


உள்ளதை மறைக்காதிருக்க வேண்டுமானால், நாட்டு நிலை கண்டு உலகம் மதிக்கவேண்டுமானால், இந்தச் சூழ் நிலை மாறியாகவேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியத்தை நடைமுறைத் திட்டமாக்கி, சற்றுச் சிரமப்பட்டால் நமது நாட்டிலே நிச்சயமாக வனவளத்தைப் பெறமுடியும். நமது முன் சந்ததியார்களுக்டி இருந்ததை விட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம் அடவியில், ஆற்றோாத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில், ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க குரு. காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து; பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம்; ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம்; இப்போதுள்ளது. உலகை நமது வீட்டுக்கு அழைத்துவந்து காட்டக்கூடிய காலம்--பாமர மக்கள் பாராளும் காலம். கனவளத்தை அதிகப்படுத்த மார்க்கம், முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம் இதோ நான் பேசுகிறேன்--நீங்கள் நீங்கள் கேட்கிறீர்கள். இடையே--பலப்பல மைல்கள்--நானோ நீங்களோ, தவசிகளல்லர்-- அருளால் அல்ல இந்த ஒலி அங்கு கேட்பது அறிவின் துணைகொண்டு விஞ்ஞானி ஆக்கித் தந்த சாதனம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இவ்விதச் சாதனங்கள் இல்லாதிருந்த நாட்கள், நமது முன்னோர்கள் காலம்.

இவ்வளவு வசதிகள் நமக்கிருந்தும், ஏன், மன வளம் இவ்வளவு குறைவாக இருக்கிறது? வீடுகளிலே மனவளத்தை அதிகரிக்கவோ, பாதுகாக்கவோ, நாம் முயற்சி செய்வதல்லை--வழிவகை தேடிக் கொள்வதில்லை.

பெரும்பாலான வீடுகளின் அமைப்பையே பாருங்கள். கூடம் இருக்கும்; விசேஷ காரியங்களுக்குப் பயன்பட! கூடத்து அறை இரண்டிருக்கும்; அதிலொன்று பூட்டியே இருக்கும். சாவி வீட்டின் அதிபரிடமிருக்கும். மற்றோர்