பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி

35



நாதஸ்வரத்தில், பிடிலில், வீணையில், புல்லாங்குழலில் கேட்கின்றனர் என்றாலும் வாய்ப்பாட்டும் தேடுகின்றனர்! காரணம் என்ன? வாய்ப்பாட்டில் நாதமும், நெஞ்சை அள்ளும் சாஹித்யமும் இருக்கின்றது என்பதற்காகத்தான். நெஞ்சை அள்ளும் சாஹித்யம் தமிழருக்குத் தமிழில் இருத்தலே முறை.

முன்னாளில் இசை

"பொழிற்கு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையின வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
யெழுதரு மின்னிடையே யெனையிடர் செய்தவையே."

பக்கத்திலே காதலி! எதிரே கடல்! யாழை வாசித்துக் கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள இசையை இனிமையாகப் பாடுகிறான் இளமையும் செல்வமும் பொருந்திய கோவலன். மாதவியின் மனம் மகிழப் பாடினான்! மாதவியோ, ஆடலிலும் பாடலிலும் தேர்ந்த அணங்கு, கோவலன் வணிகன் ஆயினும், அவன் பாடியது, மாதவியை மகிழ்விக்கும் விதமாக இருந்தது.

நறுமலரே! விரிமணலே! மதிமுகமே! மின்னிடையே! என விளித்துக் கோவலன் யாழை இசைத்துக் கானல் வரி பாடுகிறான். அந்நாட்டினருக்குத்தான் இன்று, "கச்சேரிகளில் களை கட்டும் பாட்டுக்கள்" இல்லை; தெலுங்குக் கிருதிகள் போய்விட்டால், சங்கீதக்கலையே சஷீணமாகிவிடும் என்று 'மித்திரன்' கூறும் நிலை வந்தது!

மரகதமணித்தான் செறிந்த
    மணிக்காந்தண் மெல் விரல்கள்
பயிர் வண்டின் கிளைபோல
    பன்னரம்பின் மிசைப் படர
வார்தல் வடிந்தலுந் தலுறழ்தல்
    சீருடனுருட்ட றெருட்டலுள்ள
லேருடைப் பட்டடையென
    விசையோர் வகுத்த