பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சி.என். அண்ணாதுரை முற்படுகின்றனர். வெளிமொழிக் கீதங்கள் என்ற முறையிலே இரண்டோர் கிருதிகள் பாடலாம். குற்றமில்லை; ஆனால் இசை என்றாலே அது தெலுங்கோ. இந்துஸ்தானியோதான் என்ற பொருள் படும்படி கச்சேரிகள் இருப்பதை வரவேற்கமாட்டார்கள். இனித் தமிழர் "ராகப் பிரதானமுள்ள கீர்த்தனங்கள்" தமிழிலே இல்லை. இனி ஏற்படவேண்டும் என்று 'மித்திரன்' கூறுகிறது; ஆனால் இன்றுள்ள இசை வல்லுநர்களால், இத்தகைய ராகப் பிரதானமுள்ள கீர்த்தனங்கள் இயற்ற முடியாது என்று மித்திரன் கூறத் துணிகிறதா என்று கேட்கிறோம். கர்நாடக சங்கீத வர்ணமெட்டுக்களை அனுசரித்துச் சில தமிழ்ப் பாட்டுக்கள் உள்ளன என்பதை 'மித்திரன்' ஒப்புக்கொள்கிறது. அவை போன்ற பாடல்கள் வளரவே அண்ணாமலை நகர் மாநாட்டினர் வழிவகை தேடினர். வாய்ப்பாட்டு ஏன்? சங்கீதம் எந்தப் பாஷையாக இருந்தாலென்ன? என்று கூறுபவர்கள்; 'ராக இலட்சணமே முக்கியம்! சாஹித்ய இலட்சணம் முக்கியமாகாது என்று கூறுபவர்கள்; திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்களின் நாதஸ்வரமும், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பிடிலும் இருக்க, வாய்ப்பாட்டு வேறு ஏன் தேடுகிறார்கள்? அந்த நாதஸ்வரத்தில் ராக இலட்சணங்கள் போதும் என்கிற அளவுக்குக் கேட்கலாம்! ஜிலுஜிலுப்பு வேண்டுமா? கமகம் தேவையா? ஆலாபனத்தில் அலங்காரம் வேண்டுமா? எது நாதஸ்வரக்காரரால் முடியாது? தாள வரிசைகளிலே திறமைகள் கேட்க வேண்டுமா? பக்கத்திலே நிற்கும் தவுல்காரரைப் பார்த்தால் போதுமே கோடை இடி கேட்கும்! சங்கீதம், வெறும் ராக இலட்சணம், நாதம் என்று பேசுவோர், நாதத்தை,