பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 33 பொருள் விளங்கப் பாடும்போது, இன்ன விஷயமாகப் பாடப்படுகிறது என்று புரிந்து கொண்டு பூரிக்கின்றனர். இசை விருந்தை இன்று அளித்துக்கொண்டு வரும் தோழியர் எம்.எஸ். சுப்புலட்சுமி தியாகராயர் கீர்த்தனங்களைப் பல வருடப் பாடப் பழக்கத்துடன் பாடிக்கொண்டிருந்தபோது. வித்துவான்களுக்கு அறிமுகமாகி இருந்தாரேயொழிய நாட்டு மக்களுக்கு அறிமுகமாகவில்லை. ஏன்? நாட்டினர் எம்.எஸ்.எஸ். பாடுவது பிரமாதமான வித்தை அடங்கிய பாட்டு என்று கேள்விப் பட்டார்களேயொழிய, அதன் சுவையை அனுபவிக்க முடியவில்லை. ஆனால், அதே எம்.எஸ்.எஸ். "மனங்குளிர" என்ற செந்தமிழ் இசையைப் பாடியதும், தமிழரின் மனமெல்லாம் குளிர்ந்தது. இசை நம்மை இழுத்து சகுந்தலை கண்ட சோலை, சாலை, பசு, மான், கன்று, குயில், மயில் ஆகியவற்றை நமது மனக்கண் மு நிற்கும்படி செய்தது. இசை இன்பத்தை மக்கள் முழுவதும் அடைய முடிந்தது. ன் தமிழ் இசைக்கு ஆதரவு இருக்குமா என்று கேட்கும் பேர்வழிகாள்.இசையரசு தண்டபாணி தேசிகரின் தமிழ் இசை, மக்களை எவ்வளவு உருக்குகிறது! பொருள் விளங்க, உணர்ச்சி ததும்ப அவர் நமது தமிழில் நம்மிடம் பாடுவதால்; மக்கள் உருகுவது இருக்கட்டும்; தேசிகரே உருகுவதைக் காணலாம், தமிழ் இசை பாடும்போது! மதுரை மாரியப்ப சுவாமிகள், சிதம்பரம் ஜெயராமன், திருவாரூர் நமச்சிவாயம் ஆகிய இசைமணிகளின், ஒலி, நமது தமிழாக இருப்பதால் நமது நெஞ்சை அள்ளுவதைக் கூற வேண்டுமா? இயற்ற முடியாதா? நம்மவரின் நெஞ்சில் நேராகச் சென்று இன்பத்தைத் தர தமிழ் இசையினால் மட்டுமே முடியும். அத்தகைய தமிழ் இசையை வளர்க்க, பாடகர்களும் கழகங்களும்