உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

311

இதன் பின் 1837 வரை தூதுவராயிருந்து, ராட்டர் டாம் மாநகருக்கு மாற்றப் பெற்றார். 1849 இல் அவர் ரோம் நகர் வந்தார். இத்தனை பணிகளிலும் அவர் ஒரு சிறிதுகூட உழைப்பிலும வாய்மையிலும் குறைபடவில்லை. ஆயினும் எப்படியோ தாயகத்தில் அவரிடம் பொறாமை கொண்டவர்கள் அவர்மீது பழியும் குற்றமும் சாட்டினர். தீர்ப்பும் அவருக்கு எதிராயிருந்தது. அவர் பதவிகளைத் துறந்தார். ஆனால் பதவி இழப்பைவிட, குற்றச் சாட்டின் கறையே அவரை வேதனைக்குள்ளாக்கிற்று.

இன்னொருவர் வாழ்வில் இளமையின் இந்தத் தோல்வியும் கசப்பும் வாழ்க்கை யார்வத்துக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கும். ஆனால் லெஸெப்ஸின் இயல்பும் பண்பும் வேறு வகையாயிருந்தன. தோல்விகள் பின்னும் சீரிய பெருஞ் சேவைக்கே அவரைத் தூண்டின.

அவர் பதவி காலப் பயணங்களில் ஒன்றில் அவர் கப்பல் சில நாட்கள் ஒரே இடத்தில் தங்கிக்கிடக்க வேண்டிவந்தது. அப்போது பொழுது போக்குவதற்காக அவர் புரட்டிய புத்தகங்களிடையே லெப்பேரின் சூயஸ் கடலிணைப்புத் திட்ட அறிக்கை அவர் கண் களில் பட்டது.அது எப்டியோ அவர் கருத்தைக் கவர்ந்தது. அவர் பொழுதைப் போக்க மட்டும் அது உதவவில்லை. அது அவர் சிந்தனையைத் தூண்டிக் கற்பனையை வளர்த்தது. பயணத்திடையே ஏற்பட்ட இத்தடங்கலே அவர் வாழ்க்கைப் பணிக்குரிய விதை விதைப்புப் பருவமாய் அமைந்தது. அவர் உள்ளம் ஓயாது அவ்வறிக்கையிலேயே ஆழ்ந்து திளைத்தது; அதைச் செயல் துறைக்குரிய ஓர் ஆர்வத் திட்டக் கோட்டையாக்கிற்று. பதவியிலிருந்து ஒதுங்கியதும் அவர் இதையே தம் வாழ்க்கைப் பணியாகத் தேர்ந்தெடுத்தார். அதைச் செயல் துறைக்குக் கொண்டு வருவதற்குரிய வேளை, வகை துறைகளை அவர் எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்.

எகிப்தில் இச்சமயம் டச்சுத் தூதர் மனைத் தலைவராயிருந்தவர் அவருடன் ராட்டர்டாம் நகரில் பழகியவர் 1852இல் அத்தலைவருக்கு அவர் ஒரு முடங்கல் வரைந்தார். சூயஸ் கால்வாய்த் திட்டத்துக்கான உரிமையை அவர் மூலமாகவே எகிப்திய பாஷா அப்பாஸிடம் கோரினார் பாஷா அப்பாஸ் தில் ஒரு சிறிதும் கருத்துச் செலுத்த வில்லை. ஆயினும்