உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

315

என்று தீர்மானிக்கப்பட்டது.சயீத் துறைமுகமாகக்கட்டமைக்கப் பட்ட இடம் இதுவே. இம்மாறுதலுக்கேற்ப, கடற்கால் மென்சாலா ஏரி சுற்றிச் செல்லாமல் அதனூடாகக் கடந்தது. முன்பு மென்சாலா ஏரியாயிருந்த பரப்பில் ஒரு பகுதியிலேயே இப்போது புதிய சயீத் துறைமுகத்தின் இரேவுகள்

கட்டமைக்கப்பட்டுள்ளன.

கடற்கால் அமைப்புடன் அமைப்பாகப் பாசனம்,நீர்ப் போக்கு வரத்து, குடிநீர் ஆகிய மூவகையிலும் பயன்படும்படியான ஒரு நன்னீர்க் கால்வாயும் துணையமைப்பாகத் திட்டமிடப் பட்டது. பாஷாவின் பத்திரத்திலேயே இடம் பெற்ற செய்தி இது. இக்கால்வாய் நீலாற்றில் கெய்ரோ அருகில் புலாக் என்னுமிடத்தில் தொடங்கி, தோமிலாத் அருகிலுள்ள வாடிப்பள்ளத்தாக்கு வழியாகச் சென்று திமாஷ் ஏரியருகில், தற்போது இஸ்மாயிலியா நகரம் அமைக்கப் பட்டிருக்கும் இடத்தில் கடற்காலில் கலக்கவேண்டும். இக் கால்வாயிலிருந்து ஒரு குடிநீர்க் காலின் கிளை தெற்கு நோக்கி சூயஸுக்கும் மற்றொரு, கிளை வடக்கு நோக்கிப் பெலூஸியம் குடாவுக்கும் செல்ல வேண்டுமென்று பத்திரம் திட்டம் வகுத்திருந்தது.

ம்

திமாஷ் ஏரியில் நடுவே ஒரு தீவமைத்து, ஏரியை ஒரு முதல்தர உள்நாட்டுத் துறையாக்க வேண்டுமென்று கூடப் பாஷா பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். என்றும் நிறைவேற்றப்படாமல் ஒதுக்கப்பட்டு விட்ட பத்திரப் பகுதிகளில் இது ஒன்று.

திட்டத்தின் செயல் முறைகளைத் துணைவர்களிடம் விட்டு விட்டுக் கூட்டுக்கழக முயற்சியிலும், மேலுரிமை ஏற்பிசைவு பெறும் முயற்சிலும் லெஸெப்ஸ் கருத்துச் செலுத்தலானார்.

பல தலைமுறைகளாக எகிப்திய பாஷாவிடம் பல்வேறு சலுகைகளுக்காக உலக வல்லரசுகளெல்லாம் அரும்பெரும் முயற்சிகள் செய்து காத்துக் கிடந்தன. நடு உலகில் அவ்வல்லரசுகளுக் கெல்லாம் கிட்டாத பெருஞ்சலுகை ஒரு தனி மனிதருக்கு அளிக்கப் பட்டது கண்டு, உலகெங்குமே பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும் பொதுவாக பிரான்சும் ஆஸ்திரேலி யாவும்இவ்வுரிமையில் மன நிறைவே கொண்டன. பிரிட்டனும்,