உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

313

இச்சலுகைகளின்படி சூயஸ் நில இணைப்பை வெட்டி அதனூடாக ஒரு கடற்கால் அமைக்கும் உரிமை பெர்னாண்ட்டி லெஸெப்ஸுக்கும் அவர் தலைமையில் அமையும் உலகளாவிய கூட்டுக் கழகத்துக்கும் பாஷாவால் அளிக்கப்பட்டது. கூட்டுக் கழகம் சூயஸ் கடற்கால் முழுஉலகக் கழகம் (Compagnie Universelle du Canal de Suez) என்ற பெயருடன் நிலவ வேண்டும். தரப்படும் உரிமை கடற்கால் திறக்கப்பட்ட நாளிலிருந்து 99 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் முடிவில் வழங்கியவரிடமே அது மீண்டுவிடும். கழகம் எகிப்திய அரசியலுக்கு ஆண்டுதோறும் நிக ஆதாயத்தில் 15 சதமானம் இறைவழியாகச் செலுத்த வேண்டும். கடற்காலுக்கு வேண்டிய நிலவழி வாய்ப்பு வசதிகள் அரசியலாரால் கழகத்துக்கு விட்டுத்தரப்படும்.

இவை தவிர, நுணுக்க விரிவான உரிமை வகுப்பில் கட்டுப் பாடுகளும், சலுகைகளும் தொகுக்கப் பெற்றிருந்தன. அவற்றுள் சில குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் திட்ட வரலாற்றில் அவை எதிர் பாராச் சிக்கல்கள் விளைவித்தன.

கடற்கால் வேலைகளில் ஐந்தில் நான்கு பங்கு தொழிலாளர் கள் எகிப்தியராயிருக்க வேண்டுமென்பது ஒரு கட்டுப்பாடு. இதற்கெதிராக,வேண்டிய அளவு எகிப்திய வேலையாட்களை அளிக்கும் பொறுப்பை எகிப்திய அரசியலின் சார்பில் பாஷாவே ஏற்றுக் கொண்டிருந்தார். அவர்களுக்குரிய உணவும், உறையுளும் குறிப்பிட்ட கூலியும் மட்டுமே கழகத்தில் பொறுப்பு பின்னாட் களில் இவ்விதி முழுவதுமே மாற்றப்பட வேண்டியதாயிற்று.

சலுகைகளிலும் இதுபோலத் தொல்லை தந்த பகுதி உண்டு. கால்வாய்ப் பகுதியில் நிலங்களைப் பல்வேறு வகைகளில் பாஷா விட்டுக்கொடுத்திருந்தார். பல சிறப்புரிமைகளையும் கழகத்துக்குத் தந்திருந்தார்.தவிர, கழகம் எகிப்தியச் சட்டங்களுக்கும் எகிப்தியச் சூழல்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் உட்பட்டதானாலும், அதன் உலகளாவிய சேவை வலியுறுத்தப்பட்டு, பெயரும் 'முழு உலகக் கழகம்' என்று வரையறுக்கப்பட்டிருந்தது.

சூயஸ் கால்வாய்ப் பகுதி எகிப்துக்குரியது.எகிப்து அரசியல் இச்சமயம் கிட்டத்தட்டத் தன்னுரிமை உடையதாகவே இருந்தது. ஆயினும் துருக்கி பெயரளவிலேனும் மேலுரிமை தாங்கி வந்தது.