88 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
பாராட்டுவது என்பதன்று; பெருமையை உள்ளவாறு உணர்வதும் அதில் உள்ள குறைகளை எடுத்துரைப்பதுமே ஆகும். காந்தியடிகள் இந்தியாவுக்கு விடுதலையார்வம் ஊட்டியவர்; அவ்வார்த்தை நாடெங்கும் பரப்பியவர்; அச்சத்தை நீக்கியவர். பிரிட்டிஷாரைக் கண்டு நடுங்குதல், பிரிட்டிஷாரை விட்டால் கதியில்லை என்று எண்ணுதல், அவர்கள் ஆட்சியில் பதவியடைவதினும் பேறு வேறில்லை என்ற மனப்பான்மை கொள்ளுதல் ஆகியவை 'காந்தி' என்ற பெயர் பரவியதுமே நாட்டைவிட்டு ஓடினது தவறு என்று கண்டால் உயிரையும் அவர் கொடுப்பார்; இந்தியாவுக்கு நலம் என்றால் எந்நலமும் விடுவார்; அதே சமயம் மனிதர் இனத்தில் அவர் பற்றுதலுடையவர். காந்தியடிகளின் இத்தனை பெருமைகளையும் போஸ் பாராட்டி பன்முறை பிறருக்கும் வலியுறுத்தினார்.
ஆனால் காந்தியடிகளின் அரசியலில் கொண்ட ஆன்மிகப் போக்கு, பழங்கால ஆட்சி வேண்டுமென்ற எண்ணம், பிரிட்டிஷார் தயவையும் நேர்மையும் எதிர்பார்த்தால், சமரசம் செய்ய முந்துதல், மக்கள் மனநிலை, குறைபாடுகளை அறிந்து செயலாற்றாமை, ஆன்மிகப் பெருந்தன்மை காரணமாக எதிரிகளுக்கு விட்டுக் கொடுத்தல் ஆகியவைகளை போஸ் கண்டித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை கூற எண்ணினார். இது காந்தியடிகளின் பெருமையை உணராததாலன்று; நாட்டின் நலம் கருதியும் அவர் புகழ் கருதியுமேயாகும். காந்தியடிகள் ஒப்பற்ற வழிகாட்டி என்பதைப் போஸ் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்தார். ஆயினும் தந்தையைக் குறைகூறாமல் செயலாற்றிப் பேணும் தனயன்போல் அவர் செயலாற்ற முனைந்தார்.ஆனால் அவர் காந்தியடிகளையும் நாட்டையும் அறிந்த அளவு காந்தியடிகளும் முதியோராகிய காந்தீய பக்தர்களும் அவரையோ நாட்டையோ உணரவில்லை. இஃது இந்தியாவின் தவக்குறை என்றுதான் கூறவேண்டும்.
போஸ் அஹிம்ஸை வழியில் நில்லாதவர் நில்லாதவர் என்று காந்தியடிகள் கூட எண்ணியதாகத் தோன்றுகிறது. ஆனால் தலைவர் போட்டியையும் அச்சமயம் காந்தியும் போஸும் நடந்து கொண்ட வகைகளையும் காண்பவர்களுக்கு அஹிம்ஸை வீரர் எனப் புகழ் பெற்ற காந்தியடிகளைவிட போஸ் மிகுதியாக